தூய்மை பாரத இயக்கம் திட்ட பணியிடங்களுக்கு விண்ணபங்கள் அனுப்பலாம்;க.இளம்பகவத் தகவல்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்கம்(ஊ.) திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திடும் பொருட்டு கீழ்கண்ட வல்லுநர்கள்(Experts) தற்காலிகமாக வெளியாதார முறையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
1)திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுகாதார பணிகள் (Solid Waste Management and Sanitation) -2 பதவி – ஊதியம் ரூ.35,000/- , 2. திரவக்கழிவு மேலாண்மை (Liquid Waste Management) – 1 பதவி – ஊதியம் ரூ.35,000/- , 3. திட்டமிடுதல், ஒருங்கிணைத்தல் மற்றும் கண்காணித்தல் ( Planning, Convergence & Monitoring) – 1 பதவி – ஊதியம் ரூ.35,000/- , 4. தகவல், கல்வி மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான பணிகள ; (Information Education and Communication IE Consultant) – 2 பதவி – ஊதியம் ரூ.25,000/- ஆகும்
திடக்கழிவு மேலாண்மை சுகாதாரம் மற்றும் திரவக்கழிவு மேலாண்மை பதவிக்கு இளங்கலை சுற்றுச்சூழல் பொறியியல் பட்டம் / பொறியியல்(Civil) பட்டம் பெற்றிருக்க வேண்டும், குறைந்தபட்சம் 1 அல்லது 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும், (I) சுற்றுசூழல்கட்டுமான பிரிவு (II) தண்ணீர் மற்றும் சுகாதாரம் (WASH), (IIIகண்காணிப்பு மற்றும் மதிப்பீடு (M&E). (IV) திட அல்லது திரவ கழிவு மேலாண்மை மற்றும் மேம்பாட்டு பிரிவு, மத்திய அல்லது மாநில ஒப்புதல் பெற்ற பல்கலைகழகம் அல்லது பல்கலைகழக மாநில குழு சட்டத்தின் கீழ் இயங்கும் அல்லது அதற்கு இணையான கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
திட்டமிடுதல், ஒருங்கிணைத்தல் மற்றும் கண்காணித்தல் பதவிக்கு மத்திய அல்லது மாநில அரசால் இணைக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது பல்கலைகழகத்தில் B.Tech/MBA/MSc. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தகவல்,கல்வி மற்றும் தொடர்பு குழுவிற்கான பணி அனுபவம் மற்றும் இதர முன்னுரிமை விபரம்; 1) 2 முதல் 3 ஆண்டுகள் வரை மக்கள் தொடர்பு / WASH / சமூகஅணிதிரட்டல் / பொதுத் துறை தொடர்பு மற்றும் அரசு அல்லது தனியார் துறையில் சமூக ஊடக பிரிவுகளில் பணிபுரிந்த விண்ணப்பதாரர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்,
2)அரசுஅலுவலர்கள்,கல்வியாளர்கள், உள்ளுர் கலைஞர்கள், சமூக ஊடக செல்வாக்கு பெற்றவர்கள் மற்றும் பலதரப்புபங்களிப்பாளர்களுடன் தொடர்புகொண்டு அதிக தேவையுள்ள சூழலில் பணிபுரியும் திறன் கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்,
3) கணினியில; MS Word, Powerpoint, Adobe Photoshop & Illustrator போன்றவற்றில் அதிகபரிச்சயமும், இவற்றை கையாளுவதில் திறமையும் வீடியோதயாரிப்பு, மீம்ஸ் தயாரித்தல், சுவரொட்டிகள் மற்றும் துண்டுப் பிரசுரங்களை உருவாக்குதல் போன்றவற்றில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்,
4) தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முன்மாதிரியாக எழுதும் திறன் வேண்டும். நேரடிதகவல் தொடர்புதிறன் மற்றும் தமிழ் பாப் கலாச்சாரம் (Tamil Pop Culture) பற்றிய நல்லபுரிதல் அவசியம் பெற்றிருத்தல் வேண்டும், 5) உயர்தர பணி அனுபவத்துடன் வெளியிடப்பட்ட படைப்பு (high Quality of workexperience of specific relevane) இருக்கும் பட்சத்தில் முறையான கல்வித்தகுதி அனுபவம் மற்றும் வயது (Formal education, experience and age) ஆகியவற்றில் தளர்வு அனுமதிக்கப்படலாம்.
இதற்கான (Monthly Remuneration) மாதாந்திர ஊதியம் ரூ.35,000/- வெளியாதார முறையில் (சேவை வரி பிடித்தம் உட்பட) விடுவிக்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை கூடுதல் ஆட்சியர்(வ)/திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தூத்துக்குடி என்ற முகவரிக்கு 04.04.2025—க்குள் அனுப்பிட தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி பணிகள் மற்றும் இதர சந்தேகங்களை அலுவலக வேலை நாட்களில் தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் நேரில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.
