• April 4, 2025

பள்ளிக்கூட ஆண்டுவிழாவில் மாணவ,மாணவியர் கலைநிகழ்ச்சிகள்

 பள்ளிக்கூட ஆண்டுவிழாவில் மாணவ,மாணவியர் கலைநிகழ்ச்சிகள்

கோவில்பட்டி கெச்சிலாபுரம் புனித ஓம் குளோபல் சி.பி.எஸ்.இ பள்ளியில் மூன்றாம் ஆண்டு  விழா நடைபெற்றது.

பள்ளி மாணவ மாணவிகளின் நடனம் கண்களைக் கவரும் வகைளில் அமைந்தது. ‘பாண்டா’ வின் மிகப்பெரிய தோற்றம், சிப்பிக்குள் இருந்து மாணவிகள் வெளிவந்த அமைப்பு, பரதம், வில்லிசை, தமிழிசை, பக்தி

இசை, பறையிசை, யோகா, நாடகம், ஸ்லோகம், பொய்கால் குதிரை மற்றும் மழலைகளின் கொஞ்சும் மொழியில் அமைந்த குறள், பாடல் ஆகியவை காண்போரை மெய்சிலிர்க்க வைத்தன.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட டாக்டர் மீனாட்சி சுந்தரனார் விழாவிற்கு தலைமை தாங்கி பேசினார். மேலும்  தலைமை உரை மேலும்போட்டிகளில் வெற்றி பெற்றவ மாணவர்களுக்கு  புத்தகங்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

பள்ளி தாளாளர் இலட்சுமணப் பெருமாள், செயலாளர் உஷாராணி, இயக்குநர் சிவராம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். பள்ளி முதல்வர் பொன்தங்க மகேஸ்வரி ஆண்டறிக்கை வாசித்து  நன்றி கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *