• April 3, 2025

மக்கள் குறை களையும் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்; ஆட்சியர் இளம்பகவத் வழங்கினார்!

 மக்கள் குறை களையும் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்; ஆட்சியர் இளம்பகவத் வழங்கினார்!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் மக்கள் குறை களையும் நாள் கூட்டம் நேற்று  நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 648 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 46 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

அதனைத்தொடர்ந்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் சாலை விபத்தில் உயிரிழந்த 4 பயனாளிகளுக்கு தலா 1 லட்சம் வீதம் 4 லட்சத்திற்கான காசோலை மற்றும் விபத்தில் காயமடைந்த ஒரு  பயனாளிக்கு 50,000 ரூபாய் காசோலை என மொத்தம் 5 பயனாளிகளுக்கு ரூ.4,50,000 லட்சத்திற்கான காசோலையினையும், வல்லநாட்டை சேர்ந்த கணவரால் கைவிடப்பட்ட பெண்ணுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டுவதற்காக இலவச வீட்டுமனைப் பட்டாவையும்  மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமலிங்கம், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் ஹபிபூர் ரஹ்மான், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், துணை ஆட்சியர் (பயிற்சி) சத்யா மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *