கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் 52 பேருக்கு இலவச கண் கண்ணாடி

கோவில்பட்டி ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் இலவச கண் கண்ணாடிகள் வழங்கும் நிகழச்சி வேலாயுதபுரத்தில் நடைபெற்றது.. இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை கோவில்பட்டி கிராம நிர்வாக அலுவலரர் மந்திர சூடாமணி வரவேற்றார்.
ஜீவ அனுக்கிரக அறக் கட்டளை நிறுவனர் ராஜேந்திரன்.. டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் முருகன், லட்சுமி டெக்கரேஷன் சண் முகவேல், ராஜா சிப்ஸ் ராஜா, தர்மம் வெல்லும் மக்கள் நல அறக்கட்டளை பூலோக பாண்டி, சாந்தி கன்ஸ்ட்ரக்சன் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு வேலாயுதபுரம் நாடார் உறவின்முறை சங்க தலைவர் தர்ம ராஜா தலைமை தாங்கினார.. வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி 52 பயனாளிகளுக்கு இலவச கண் கண்ணாடிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கு ராகவேந்திரா அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தி னராக முன்னாள் தலைவர் சேதுரத்தினம். மகளிர் அணி மகாலட்சுமி.. அறக்கட்டளை உறுப்பினர்கள்.. நடராஜன், தங்கராஜ், எஸ் பி பாண்டியன்.. ஆகியோர் கலந்து கொண்டனர்..
அறக்கட்டளை பொருளாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.. நிகழ்ச்சி ஏற்பாடுகளை அறக்கட்டளை செயற்குழு உறுப்பினரும்.. 5வது வார்டு நகர மன்ற உறுப்பினருமான லவராஜா செய்திருந்தார்..
