அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

திமுக பொதுச் செயலாளராகவும், தமிழக நீர்வளத்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வருபவர் துரைமுருகன். 86 வயது ஆகும் அவருக்கு அடிகடி வயது மூப்பு காரணமாக ஏதாவது உடல்உபாதைகள் ஏற்பட்டுவருகிறது.
இந்நிலையில் அவருக்கு நேற்று திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. அத்துடன் சளிதொந்தரவும் ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று அமைச்சர் துரைமுருகன் உடல நலம் விசாரித்தனர். மேலும் அவரது உடல் நிலை குறித்து மருத்துவர்களிடமும் கேட்டறிந்தனர்.
இதற்கிடையே துரைமுருகன் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அனேகமாக அவர் நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்று தெரிகிறது.
