• May 23, 2025

திருப்பதி-பழனி ரெயில் சேவை தொடங்க மத்திய அரசிடம் பேசுவேன் ; பழனி கோவிலுக்கு வந்த பவன் கல்யாண் உறுதி

 திருப்பதி-பழனி ரெயில் சேவை தொடங்க மத்திய அரசிடம் பேசுவேன் ; பழனி கோவிலுக்கு வந்த பவன் கல்யாண் உறுதி

ஆந்திர மாநில துணை முதல்-மந்திரி பவன்கல்யாண், தமிழகத்தில் ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ளார். குறிப்பாக அறுபடை வீடுகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். அதன்படி பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்தார். தனது மகன் அகிராநந்தனுடன் வந்து இருந்தார்.,

முன்னதாக பவன்கல்யாண், நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் எந்த கோவிலுக்கு போனாலும் மக்கள் நலமுடன் இருக்க வேண்டுவேன். அதன்படி தேசத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் நல்லது நடக்க பழனி முருகனை வேண்டினேன். திருப்பதி-பழனி இடையே நிறுத்தப்பட்ட பஸ் சேவையை மீண்டும் தொடங்க ஆந்திர போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல் திருப்பதியில் இருந்து முக்கிய ஆன்மிக தலங்களுக்கு ரெயில் சேவை தொடங்க முடிவு செய்துள்ளோம். எனவே பழனி-திருப்பதி இடையே ரெயில் இயக்கவும் மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்

இவ்வாறு பவன் கல்யான் கூறினார்.

திருப்பதி லட்டு விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பவன் கல்யாண் , திருப்பதி கோவில் லட்டு தயாரிப்பில் தவறு இருப்பதாக கடந்த 2 ½ ஆண்டுகளுக்கு முன்பே நான் சொன்னேன். கடவுள் விஷயத்தில் யாரும் இதுபோல்  செய்யக்கூடாது என்றார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *