கோவில்பட்டியில் நேதாஜி கால்நடை சந்தையை மீண்டும் தொடங்க கோரி மனு

கோவில்பட்டி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்க தலைவர் நேதாஜி பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள், நகராட்சி தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறி இருந்ததாவது:-
சுதந்திர போராட்டத் தலைவர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் பெயரில் செயல்பட்டு வந்த கால்நடை சந்தையை மீண்டும் தொடங்கித வேண்டும். மேலும் நேதாஜிக்கு உருவச்சிலை அமைக்க வேண்டும்,.
கடந்த 7 வருடங்களுக்கும் மேலாக இந்த கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு தருணங்களில் மனு அளித்து இருக்கிறோம், எந்த நடவடிக்கையும் இல்லை. அதனால் முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும் நடக்க உள்ள நகராட்சி கூட்டத்தொடரில் அனைத்து நகராட்சி உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து தீர்மானம் கொண்டு வந்து உதவ வேண்டும்.
புதுக்கோட்டை நகராட்சியில் தேவர் சிலை வைப்பது தொடர்பாக நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது போல் கோவில்பட்டியிலும் நிறைவேற்றும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
