ஸ்படிகம் மாலை யாரெல்லாம் அணியலாம் …?

ஸ்படிகம் என்பது ஒரு விதமான பாறை வகையை சார்ந்தது. இது பூமிக்கு அடியில் பல்லாயிரம் ஆண்டுகளாக புதையுண்ட நீர் இறுகி பாறைகளாக உருமாற்றம் அடைந்தவை. இந்த ஸ்படிக பாறையை சுத்தம் செய்து பல்வேறு வடிவங்களில் விற்பனை செய்கின்றனர்.
1 முதல் 10 வரை தரம் பிரிக்கப்பட்டு கிடைக்கும். அதில் முதல் தரம் வாய்ந்த ஸ்படிகம் மிகவும் தெய்வீக சக்தி கொண்டவை. ஆன்மீக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் ஸ்படிகம் சிறப்பு மிக்க பயன்களை அள்ளி தருபவை.
ஸ்படிகம் ஒரு மணி நேரத்திற்கு நாம் ஒரு நாளில் விடும் மூச்சின் எண்ணிக்கையில் அதிர்வலைகளை வெளியிடுவதாக கூறப்படுகிறது. அதனால் அபரிமிதமான சக்திகளை தன்னகத்தே கொண்டு அமைதியாக விளங்குகிறது.
தங்கமும் வெள்ளியும் அணியும் போது கைக் கொள்ளும் நம்பிக்கைகள் போலவே ஸ்படிக மாலை அணிவதன் பின்னும் அதிக நம்பிக்கைகள் உண்டு.
ஸ்படிக மாலையை ஒருவர் அணிந்த பின் மற்றவர்கள் மாற்றி அணியும் போது தண்ணீருக்குள் குறைந்தது 3 1/2 மணி நேரமாவது ஊறவிட வேண்டும்.
மற்ற ரத்தின உபயோகத்திற்கும் ஸ்படிக மாலை உபயோகத்திற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. ஸ்படிகத்தைத் தவிர மற்ற அனைத்து ரத்தினங்களையும் இரவில் அணியலாம். ஆனால் ஸ்படிகத்தைக் கண்டிப்பாக இரவில் அணியக்கூடாது.
காரணம், அது உபரத்தின வகையைச் சார்ந்தது மட்டுமல்ல. தானாகத் தன் அதிர்வுகளை வெளியேற்றும் சக்தி ஸ்படிகத்திற்குக் கிடையாது என்பதும் தான்.
ஸ்படிக மணிகளை எந்த உலோகத்தினோடும் இணைக்கக் கூடாது. ருத்ராட்சம் கொண்டும் சேர்க்கக் கூடாது. தங்கம் அல்லது வெள்ளியால் கோர்த்து மாலையாக செய்து கொள்ளலாம்.
ஸ்படிக மாலையை குளிர்ப்பிரதேசங்களில் வாழ்பவர்கள், குளிர்ச்சியான உடல் தன்மை பெற்றவர்கள் கண்டிப்பாக அணிவதை தவிர்க்க வேண்டும். இவர்களை தவிர மற்றவர்கள் யார் வேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம். குழந்தைகள், பெரியவர்கள், வயதானவர்கள் என்ற எந்த பாகுபாடும் இன்றி யார் வேண்டுமானாலும் அணியலாம்.
அதிகம் கோபப்படும் நபர்கள், ரத்த அழுத்தம் இருப்பவர்கள், அதிக உடல் சூடு கொண்டவர்கள் கட்டாயம் அணியலாம் நல்ல பலன் கிடைக்கும்.
