• April 19, 2025

கெர்போட்டம் ஆரம்பம்- நிவர்த்தி…..

 கெர்போட்டம் ஆரம்பம்- நிவர்த்தி…..

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலண்டரின் தேதி யை கிழிக்கும்போது அந்த தாளில் ” இன்று கெர்போட்டம் ஆரம்பம்” என்று இருந்த வரியை படித்தவுடன் எனக்கு தெரிந்த தகவல்களை உங்களுடன் பகிரவே இந்த பதிவு.

14நாட்களில் கழித்து ” கெர்போட்ட நிவர்த்தி” என்ற வரியும் காலண்டர் தாளில் உள்ளது.இது என்ன? என்பதை பற்றியை தான் பார்ப்போம்.

கெர்போட்டம் 

நம்முடைய முன்னோர்கள் ஆயகலையில் வல்லவர்கள் தான் இந்த தனூர் மாதத்தில்( மார்கழி) யில் மழைக்கான கரு ஓட்டத்தை வைத்தே அடுத்த ஆண்டில் பருவமழை எப்படி இருக்கும் என்பதை கணித்து வானிலை சாஸ்திர அடிப்படையில் தான் இதனை குறிப்பிடுகின்றனர்.

என்ன ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?

கருஓட்ட சூழற்சி எதன் அடிப்படையாக யால் யானது ?

கரு ஓட்டம் என்பதே கரப்ப ஓட்டமாகி இன்று கெர்ப்போட்டம் மாக மருவி வருகிறது.

நம்முடைய முன்னோர்கள் சூரியனின் சூழற்சியை அடிப்படையாக கொண்டு 27வானியில்  நட்சத்திர மண்டலங்களாகவும், 12.ராசிமண்டலங்களாகவும் பிரித்து உள்ளனர் தனூர் மாதம் எனப்படும் மார்கழியில் சூரியன் தனூர் ராசி மண்டலத்தை கடக்கும் போது பூராடநட்சத்திரத்தை அடைய 14நாட்களை எடுத்துக் கொள்கிறோம்.

அந்நாட்களில் ” கருமேகங்கள் தெற்கு நோக்கிநகர்வதை கண்டு கொள்ள லாம். அந்த 14நாட்களும் கர்போட்ட நாட்களாகும். மழையை கருக் கொள்ளும் நாள் அல்லது மேகம் சூலாகும் நாள் 

இதனை பெண்ணின் 10மாத கர்ப்ப காலத்துடன் ஓப்பிட்டு பாருங்க.அதே போல மேகம் கரு கொண்டு மழை வர அடுத்த ஆண்டில் 10மாதம் கழித்து மழையை பாருங்க. 

இந்த கெர்போட்ட நாட்களில் மழையை முறையாக சூல் கொண்டால் ஒன்பது மாதம் கழித்து அடுத்த ஆண்டில் (2025) ஐப்பசி , கார்த்திகை  மாதங்களில் மானாவாரியாக விதைப்பு செய்ய பயனுள்ளதாக இருக்கும்.

பொதுவாக கெர்போட்ட நாட்கள் எந்தெந்த தேதியில் வரும் தெரியுமா ?

இந்த நாட்கள் தோராயமாக டிசம்பர் 29முதல் ஜனவரி12 வரை வரலாம் இந்த ஆண்டில் டிசம்பர்29 ஞாயிற்று கிழமையில் வந்துள்ளது )

மார்கழி மாதம் அமாவாசை முடிந்து ஒரு வாரத்தில் தொடங்கி அடுத்த வரும்14 நாட்களும் ” கர்போட்ட நாட்கள்” என்பதை நினைவில் வைத்திருக்கவும்.

இந்த நாட்களில் மழை உண்டா?

இந்த நாட்களில் லேசான தூறல், மெல்லிய சாரல், போன்ற மழை இருந்தால் மேகம் கரு கட்டி இருக்கிறது என்று பொருள்.

எனவே அடுத்த ஆண்டில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம் .இந்த நாட்களில் பெய்கின்ற லேசான மழையை வைத்து கணிக்க முடியும்.

அதற்கு நேர்மாறாக கர்போட்ட நாட்களில் கனமழை பெய்து சூறைக்காற்று விசினாலோ அல்லது கடும் வெயில் இருந்தாலோ , மேகத்தின் மழைக்கான கரு கலந்து விட்டது.என்று பொருள்.எனவே மார்கழியில் கன மழை பெய்தால் அடுத்த ஆண்டில் எதிர்பார்த்த மழை வருமா ? என்பது கேள்விக்குறியாக இருக்கும்./ மழை பொய்க்கும்.

இன்றைய காலசூழ்நிலையில், மாறுபட்ட பருவநிலை மாற்றமும் மேகத்தின் கருக்கலைக்கும் வில்லன்களாக உருவாகி இருப்பதால் தான் ஓவ்வொரு ஆண்டும் மழையின் வீரியம் , அளவு குறைகிறது.

இந்த கால கணிப்பை வைத்து மானாவாரி விவசாயிகள் மழையின் அளவை வைத்து பயிர்களை தேர்வு செய்து சாகுபடி செய்வார்கள் இது மழைக்கான கருத்து கணிப்பாக இருக்கும் இந்த கெர்ப்போட்ட நாட்கள்.

இதிலிருந்து தமிழர்களின் வானிலை அறிவு எப்படிப்பட்டது என்பதை நாம் நினைத்து பார்க்கும்போது புல்லரிக்க வைக்கிறது.

அக்ரி சு.சந்திர சேகரன், வேளாண் ஆலோசகர் அருப்புக்கோட்டை.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *