அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து போராட்டம்; கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு கூட்டத்தில் முடிவு
கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக 2025 ம் வருடத்தை வரவேற்று சிறப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தமிழரசன் தலைமை தாங்கினார். செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்கிளின், பொருளாளர் சுபேதார் கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
2024 ம் ஆண்டு நடைபெற்ற இயக்கங்கள் மற்றும் போராட்ட அனுபவங்கள் குறித்த விவாதத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
2025 ம் வருடம் முதியோர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர், குழந்தைகள், ஒடுக்கப்பட்டோர், சிறுபான்மையினர் நலனுக்கான கோரிக்கைகளை முன்னெடுப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது..
அரசாங்கத்தின் மக்கள் விரோதக் கொள்கைகள், அதிகார வர்க்கத்தின் அத்துமீறல்கள், கருத்துரிமைக்கான தடைகள் ஆகியவற்றிற்கு எதிரான போராட்டங்கள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிக்குமார், வழக்கறிஞர் முத்து குமார், பாபு, கார்மல் ஜென்ஸி, இந்திய கலாச்சார நட்புறவு கழகம் அபிராமி முருகன், ஜெய் கிறிஸ் அறக்கட்டளை நிறுவனர் வழக்கறிஞர் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர், தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு மேரிஷீலா, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் . ராஜசேகரன், அருள் தாஸ், துரைராஜ், பழனிச்சாமி, மகேந்திரன், முருகன், பகத்சிங் ரத்ததான கழக நிர்வாகிகள் மா.காளி ராஜ், லட்சுமணன், ராஜா, மக்கள் நீதி மய்யம் கமல் ரமேஷ் , மனிதநேய மக்கள் கட்சி செண்பகராஜ், தமிழ்நாடு காமராஜர் பேரவை நாஞ்சில் குமார், மக்கள் நல அறக்கட்டளை மாரிமுத்து குமார், ஜெகன், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு நிர்வாகி நல்லையா, தொழிலதிபர் மோகன், இரட்டைமலை சீனிவாசனார் இயக்கம் செல்வகுமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பாக்கியராஜ், அழகு துரை, தமிழக வெற்றி கழகம் செல்வின் சுந்தர், தியாகி விஸ்வநாததாஸ் அமைப்பு சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.