• April 19, 2025

‘ஷங்கர் இந்திய சினிமாவின் சச்சின் ‘ – நடிகர் ராம் சரண்

 ‘ஷங்கர் இந்திய சினிமாவின் சச்சின் ‘ – நடிகர் ராம் சரண்

தென்னிந்திய சினிமாவில் முண்ணனி நடிகராக வலம் வருபவர் ராம் சரண். இவர் ஆர்.ஆர்.ஆர் பட வெற்றிக்கு பின்பு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் நடித்துள்ளார். இதில், இவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்திருக்கிறார்.

இப்படம் பொங்கல் வெளியீடாக அடுத்தாண்டு ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. தற்போது இப்படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, சமீபத்தில் அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் நடந்த புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் ராம் சரண் இயக்குனர் ஷங்கரை பாராட்டி இருந்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘ஷங்கர் சார் படத்தில் நடிக்கப்போகிறேன் என்று தெரிந்ததும் என்னால் நம்ப முடியவில்லை. கனவுபோல இருந்தது. அவர் இயக்குனர்களின் ராஜா. இந்திய சினிமாவின் சச்சின். அவருடன் பணிபுரிந்த நான் மிகுந்த அதிர்ஷ்டசாலி. கேம் சேஞ்சர் படத்தின்  3 வருட பயணத்தில் பல புதிய விஷயங்களை கற்றுக்கொண்டேன்.

ஷங்கர் சார் ரசிகர்களுக்கு கேம் சேஞ்சர் படம் திரையரங்குகளில் சிறந்த அனுபவத்தை கொடுக்கும். அவருடைய சிறந்த படங்களில் ஒன்றாக இது இருக்கும்’ என்றார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *