கோவில்பட்டியில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்க நண்பர்கள் நடத்தும் 11ம் ஆண்டு சமத்துவ கிறிஸ்மஸ் விழா நடைபெற்றது .
அத்துடன் இந்திய,உலக அமைதிக்காக ஆயிரம் ஸ்தோத்திர பலி எமுதும் மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு மற்றும் அன்னதானம் விழா கோவில்பட்டி முத்தையாமால் தெருவில் நடைபெற்றது.
அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு தொடங்கி வைத்தார். அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கவியரசன்,மகளிர் அணி மாவட்ட செயலாளர் பத்மாவதி,ஜெ பேரவை நகர செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை,நற்பணி இயக்கம் தலைவர் பாலமுருகன் மற்றும் கண்ணன், ரத்தினவேல்,நாகராஜ் தவசிபாலு,சேகர்,மதிமுத்து,கருப்பசாமி நமச்சிவாயம் கலந்து கொண்டனர்