திமுக அரசை கண்டித்து கோவில்பட்டியில் பா.ம.க.ஆர்ப்பாட்டம்
![திமுக அரசை கண்டித்து கோவில்பட்டியில் பா.ம.க.ஆர்ப்பாட்டம்](https://tn96news.com/wp-content/uploads/2024/12/IMG-20241225-WA0278-850x560.jpg)
வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்க தடையாக இருக்கும் திமுக அரசை கண்டித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு, மத்திய,தெற்கு, மாவட்ட செயலாளர்கள் ராமச்சந்திரன்,சின்னத்துரை,பரமகுரு, ஆகியோர் தலைமை தாங்கினர்.
ஆர்ப்பாட்டத்தில் மூன்று முறை ஜாதிவாரி கணக்கெடுக்க வாய்ப்பு கிடைத்தும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாத திமுக அரசை கண்டித்தும்,வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 1000 நாட்களுக்கு மேல் ஆகியும் உள்இட ஒதுக்கீடு வழங்கிடாத திமுக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்,
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர்கள் மாடசாமி,நாட்டாமை,கோவில்பட்டி நகர செயலாளர் கருப்பசாமி ,அமைப்புச் செயலாளர் காளிராஜ், மாவட்டஇளைஞர் அணி துணைத்தலைவர் மகாராஜன்,மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன்,வடக்கு மாவட்ட பொருளாளர் வள்ளியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)