அடுத்தடுத்து 5 பேர் தீக்குளிக்க முயற்சி; திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
காவல் நிலையம், வட்டாட்சியர் அலுவலகம் ,ஊராட்சி அலுவலகம் என அரசு அலுவலகங்களில் தொடர்ந்து பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்காததால், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் மக்கள் குறை தீர் கூட்டத்தில் பங்கேற்று கோரிக்கை மனு அளிக்கிறார்கள்.
அந்த வகையில் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் கொடுத்த புகார் மனுக்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக புகார்கள் கூறி அடுத்தடுத்து 5 பேர் தங்கள் உடலில் மண் எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இதைகண்டு அதிரடியாக செயல்பட்டு தடுப்பு முயற்சியில் ஈடுபட்டனர், இதனால் நல்ல வேலையாக எந்தவித அசம்பாவித சம்பவமும் நடக்கவில்லை,
காலை 9 மணி முதல் 11 மணி மணி வரை 2 மணி நேரம் இந்த சம்பவங்களால் ஆட்சியர் அலுவலக வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது
இது பற்றி அறிந்ததும் ஆட்சியர், தீக்குளிக்க முயன்ற 5 பேரின் குறைகளை கேட்டறிந்து உடனடியாக நிறைவேற்றித்தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.