கொட்டிய மழையில் கழுகுமலை கோவிலில் 20 அடி உயர சொக்கப்பனை கொளுத்தப்பட்டது

 கொட்டிய மழையில் கழுகுமலை கோவிலில் 20 அடி உயர சொக்கப்பனை கொளுத்தப்பட்டது

கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது.இதையொட்டி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பெண்கள் பலர் கோவிலில் விளக்குகள் ஏற்றி வழிபட்டனர்.

மாலை 6 மணி அளவில் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டது.இதை தொடர்ந்து இரவு 8 மணிக்கு கோவிலில் நாரண தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இரவு 9.30 மணி அளவில் மயில் வாகனத்தில் வள்ளி-தெய்வானையுடன் சுவாமி எழுந்தருளி காட்சி அளித்தார்.

இரவு 10 மணி அளவில் கோவில் மேலவாசல் பகுதியில் 20 அடி உயரத்தில் வைக்கப்பட்டு இருந்த சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.அப்போது மழை பெய்து கொண்டு இருந்தது. எனினும் பக்தர்கள் குடை பிடித்தபடி இந்த காட்சியை கண்டு களித்தனர்.

சொக்கப்பனை கொளுத்தப்பட்டவுடன் சுவாமி வீதிஉலா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் மற்றும் பணியாளர்கள செய்து இருந்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *