ரஜினிகாந்த் 75-வது பிறந்தநாள்; முதல்-அமைச்சர் வாழ்த்து

 ரஜினிகாந்த் 75-வது பிறந்தநாள்; முதல்-அமைச்சர் வாழ்த்து

Rajinikanth Felicitates Writer Kalaignanam

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 75- வது பிறந்தநாளை கொண்டாடினார்.

அவருக்கு தமிழ் திரையுலகம் மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த இந்திய திரையுலகை சேர்ந்தவர்களும்  பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் :எல்லைகள் கடந்து ஆறிலிருந்து அறுபதுவரை அனைவரையும் தன்னுடைய நடிப்பால் – ஸ்டைலால் ரசிகர்களாக்கிக் கொண்ட அருமை நண்பர். திரையுலகில் தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் தாங்கள், எப்போதும் அமைதியோடும் மனமகிழ்ச்சியோடும் திகழ்ந்து மக்களை மகிழ்வித்திட விழைகிறேன்.

முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- தன் தனித்துவமான நடிப்பாற்றலால் உலகளாவிய ரசிகர் பட்டாளம் கொண்டவரும், என்றும் பழகுவதற்கு இனியவருமான அன்பு நண்பர் #சூப்பர்ஸ்டார் திரு. ரஜினிகாந்த்  அவர்களுக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள். திரையுலக வாழ்வில் பொன்விழா ஆண்டில் உள்ள அன்பு நண்பர் ரஜினிகாந்த் அவர்கள், இன்னும் பல்லாண்டு பூரண உடல் நலத்துடன் ரசிகர்களை மென்மேலும் மகிழ்விக்க வாழ்த்துகிறேன்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்:- >”நடிகர் நண்பர் ரஜினிகாந்த் இன்று 75-ஆம் பிறந்த நாளைக் கொண்டாடும் நிலையில், அவருக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டுகள் வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்”

தவெக தலைவர் விஜய்:- பேரன்பிற்கும் மரியாதைக்கும் உரிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்”.

நடிகர் ரஜினிகாந்துக்கு நடிகர் தனுஷ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் “ஒரே ஒரு சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். என் தலைவா ரஜினிகாந்த் சார் என இதய இமோஜியை பதிவிட்டுள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *