கமல்ஹாசனின் புதிய படத்தில் இணையும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்
![கமல்ஹாசனின் புதிய படத்தில் இணையும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்](https://tn96news.com/wp-content/uploads/2024/12/gv-850x560.jpg)
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் கடைசியாக சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படம் வெளிவந்தது. ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த வசூல் பெறாமல் தோல்வி அடைந்தது. அதை தொடர்ந்து, கமல்ஹாசன் தற்போது மணி ரத்னம் இயக்கத்தில் தக் லைப் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பின், இயக்குனர் பா.ரஞ்சித் நடிப்பில் ஒரு படத்திலும், நெல்சன் இயக்கத்தில் ஒரு படத்திலும் கமல் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது, கமல்ஹாசன் நடிக்கப்போகும் அவரது 237-வது படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. பிரபல சண்டை பயிற்சியாளர்களான அன்புமணி, அறிவுமணி ஆகியோர் கமலின் 237-வது படத்தை ஆக்சன் படமாக எடுக்க உள்ளதாக தெரிவித்திருந்தனர். அடுத்தாண்டு ஜனவரி மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கயுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கமலின் 237 படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜி.வி பிரகாஷ் சமீபத்தில் கமல் தயாரித்த அமரன் படத்திற்கு இசையமைத்து இருந்த நிலையில் அது பெரிய ஹிட் ஆனது, அதனால் தான் தனது படத்துக்கும் அவரையே கமல் ஒப்பந்தம் செய்திருக்கிறார்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)