• November 15, 2024

மெட்டா நிறுவனத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி அபராதம்

 மெட்டா நிறுவனத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி அபராதம்

சமூக வலைதளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை ‘மெட்டா’ நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க் ஜுக்கர்பர்க் நிர்வகித்து வருகிறார். இந்நிலையில், முறையற்ற வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர் எனும் பெயரில் பல முறை ஒரு சில நாடுகள் குறிப்பாக பிரேசில் நாடு புகார் தெரிவித்தது.

அதாவது மெட்டா நிறுவனம், மார்க்கெட் பிளேஸ் எனும் விளம்பர தொழிலில் ஈடுபட்டு வருகிறது. இந்த தொழிலை பேஸ்புக்கில் புகுத்திய மெட்டா, பயனர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் மார்க்கெட் பிளேஸ்ஸை கட்டாயம் அணுகும் வகையில் நடைமுறைப்படுத்தி இருக்கிறது. இதனால், தவறான நடைமுறைகளில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்ததாக புகார் எழுந்தது.

அவர்களை தொடர்ந்து, பல நாடுகளும் குற்றம் சாட்டி வந்தனர். இதனால், இதுபற்றி 27 நாடுகளின் ஒழுங்குமுறை அதிகாரிகள் அடங்கிய ஐரோப்பிய ஆணையம் நீண்ட நாட்களாக இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையின் இறுதியில், மெட்டா நிறுவனத்திற்கு சுமார் 80 கோடி யூரோ அதாவது இந்திய மதிப்பின்படி ரூ.7 ஆயிரத்து 100 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

ஆனால், இந்த குற்றச்சாட்டுக்கு மெட்டா நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது. ‘இந்த புகாரின் படி பார்க்கையில் எந்த ஒரு வாடிக்கையாளர்களும் எப்படி பாதிக்கப்பட்டனர் என்பது இது வரை நிரூபிக்கப்படவில்லை’ என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த வழக்கை மேல்முறையீடு செய்ய போவதாகவும் மெட்டா தெரிவித்துள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *