• November 15, 2024

எம்எஸ் தோனிக்கு ஜார்க்கண்ட் ஐகோர்ட் நோட்டீஸ்

 எம்எஸ் தோனிக்கு ஜார்க்கண்ட் ஐகோர்ட் நோட்டீஸ்

ஆர்கா ஸ்போர்ட்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்களான மிஹிர் திவாகர் மற்றும் சௌமியா தாஸ் தொடர்ந்த வழக்கில், ஜார்க்கண்ட் நீதிமன்றம் கிரிக்கெட் பிரபலம் மகேந்திர சிங் தோனிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்களான மிஹிர் திவாகர் மற்றும் சௌமியா தாஸ் மகேந்திர சிங் தோனியுடன் கடந்த 2017-ம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அதாவது, தோனி பெயரை பயன்படுத்தி கிரிக்கெட் அகாடமிகளை திறக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். ஆனால் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த எந்த விதிமுறைகளையும் ஆர்கா நிறுவனம் கடைபிடிக்கவில்லை. இதனால் இந்த ஒப்பந்தம் கடந்த 2021 ஆகஸ்ட் 15-ம் தேதி அன்று தோனியால் திரும்ப பெறப்பட்டுள்ளது.

தொடர்ந்து தன்னை ஏமாற்றியதாக கடந்த ஜனவரி 5-ம் தேதி ராஞ்சி மாவட்ட நீதிமன்றத்தில் இருவர் மீதும் தோனி கிரிமினல் வழக்கு தொடர்ந்தார். அதில் ஒப்பந்தத்தை ரத்து செய்த பிறகும் தன் பெயரில் அகாடமிகளை திறந்து, ரூ.15 கோடி மோசடி செய்ததாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை எதிர்த்து ஜார்க்கண்ட் ஐகோர்ட்டில் திவாகரும், தாஸும் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் தோனி நேரில் ஆஜராகி தனது நிலைப்பாட்டை விளக்க வேண்டும் என்று ஜார்க்கண்ட் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *