• November 16, 2024

அயோத்தி ராமருக்கு தயாராகி வரும் சிறப்பான கம்பளி ஆடைகள்

 அயோத்தி ராமருக்கு தயாராகி வரும் சிறப்பான கம்பளி ஆடைகள்

குளிர்காலம் நெருங்கியுள்ள நிலையில் அயோத்தி ஸ்ரீ பால ராமருக்கு கம்பளியும், பஷ்மினா சால்வைகளும் அணிவிக்க கோயில் நிர்வாகத்தின் சார்பில் முடிவு செய்துள்ளனர்.

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் கடந்த ஜனவரி 22-ல் அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஸ்ரீ ராமரை தரிசனம் செய்து வருகின்றனர். பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்டமாக பிரதிஷ்டை விழா நடைபெற்றது.

இந்நிலையில், ஸ்ரீ ராமருக்கு காலநிலைகளுக்கு ஏற்றவாறு உடைகளை கோவில் நிரவாகம் நிர்வகித்து வருகின்றது. முன்னதாக கோடை காலத்தில் பருத்தி ஆடைகள் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது.

இதன்படி, குளிர்காலம் தொடங்கவுள்ள நிலையில், ஸ்ரீராமருக்கு கதகதப்பான ஆடைகளை உடுத்த கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நவம்பர் 20-ல் அகான் பஞ்சமி தொடங்குகிறது. அன்று முதல் குழந்தை ராமரை கதகதப்பாக வைத்து கொள்வதற்காக கம்பளிகளும், பஷ்மினா சால்வைகளும், இதர குளிர்கால உடைகளை உடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியை சேர்ந்த வடிவமைப்பாளர்களால் ஸ்ரீராமருக்கான உடைகளை தயாரித்து வருகின்றனர்.

கூடுதலாக, ராமருக்கு வழங்கப்படும் நைவேத்யமான தயிர்ச்சாதம் பிரசாதத்திற்கு பதிலாக பாயசம் மற்றும் உலர் பழங்கள் படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து தலைமை அர்ச்சகர் கூறுகையில்,

காலநிலைக்கு ஏற்ப பால ராமருக்கு உடைகளுடன், உணவுகளும் மாற்றியமைக்கப்படுகிறது. மேலும் தினசரி சடங்குகளிலும் இந்த மாற்றம் கொண்டு வரப்படுகிறது. அதாவது குளிர்காலம் தொடங்கியவுடன் ராமரை வெது வெதுப்பான நீரில் குளிப்பாட்டப்படும். கருவறையில் சூடான சூழலை பராமரிக்க ஹிட்டர்கள் நிறுவப்படும். கடுமையான குளிர்கால நாள்களில் ராமருக்கு சூடான காற்று வீசும் கருவியும் பொருத்தப்படும்.

மேலும் முதல் தளத்தில் உள்ள ராம் தர்பாரில் வசிக்கும் ஸ்ரீ அனுமருக்கும் குளிர்கால ஆடைகள் உடுத்தப்படும். என்று அர்ச்சகர் கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *