• November 16, 2024

நாம் தமிழர் கட்சி 2026 தேர்தலிலும் தனித்து போட்டியிடும்; சீமான் பேட்டி

 நாம் தமிழர் கட்சி 2026 தேர்தலிலும்  தனித்து போட்டியிடும்; சீமான் பேட்டி

தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் “இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக எல்லை தாண்டி மீன்பிடிக்கின்றனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகே  கூறியது குறித்து கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதிலளித்த சீமான் கூறியதாவது:-

இலங்கையில் தமிழர்களை சுட்டு கொன்றார்கள். வலைகளை கிழித்து எறிந்தார்கள். இதற்கு மேல் என்ன நடவடிக்கை எடுக்க போகின்றார்கள். இதற்கு மேல் என்ன நடவடிக்கை உள்ளது. தமிழ்நாட்டு மீனவர்கள் மட்டும்தான் எல்லை தாண்டி வருகிறார்களா? கேரள மீனவர்கள் வரவில்லையா? வெளியுறவுத்துறை அமைச்சர், பாதுகாப்பு துறை அமைச்சர் நாட்டின் பிரதமர், தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இந்திய பெருங்கடல் என்றால் போதுமா? மீன் பிடிப்பதற்கு உரிமை இல்லையா? ஒரு சின்ன நாடு இலங்கை, ஆகவே, இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும். மேலும் கச்சத்தீவை மீட்க வேண்டும்.

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில், அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களுக்கு திமுக ஆட்சியில் முடிக்கப்பட்டுள்ளது. பேருந்து  நிலையத்தில் உதயசூரியன் சின்னம் தான் உள்ளது.  அதிகாரம் தமிழன் கைக்கு வரும் போது மாறும். அந்த தமிழன் நானாக இருக்க கூடாதா? நான்தான் அந்த தமிழ் மகன். மேலும், அதுல பாதி, இதுல பாதி என்று கிடையாது.

2026 தேர்தல் கட்டமைப்பு நடக்கிறது. அனைத்து கட்சியும் என் பின்னால் ஓடி வருகிறார்கள்.நான் என்ன செய்கிறேனோ அதைதான் பின்பற்றுகிறார்கள்.

திராவிட உப்பிஸ்க்கு 200 தான், தேர்தல் நேரத்தில் 1000 வந்ததா  என கேட்பார்கள். தங்கைகள் அந்த ஆயிரம் டாஸ்மாக்கில் கணவர்கள் கொடுத்தார்கள் உங்களிடம் வந்ததா என்று கேட்பார்கள். சீமான் தனித்து போட்டி தான், என் பயணம் என் கால்களை நம்பி தான் நான் உள்ளேன் .

இவ்வாறு சீமான் கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *