கோவில்பட்டியில் சாலையோரம் நிறுத்தி இருந்த வாகனங்கள் மீது மோதிய மினி பஸ்
கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு மினி பஸ்கள் இயக்கபட்டு வருகின்றன. மினி பஸ்கள் மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறது எனபது மறுக்க முடியாத உண்மை எனினும் அடிக்கடி மினி பஸ் டிரைவர்களின் தவறுகள் பேசும் பொருளாகி அவர்களுக்கு கெட்ட பெயரை வாங்கி தந்து விடுகிறது.
பயனிகள் கை காட்டும் இடங்களில் எல்லாம் திடீர் என பஸ்சை நிறுத்துவது என்பது அடிக்கடி நடைபெறும் ஒன்று. இதனால் பின்னால் வரும் மற்ற வாகனங்கள் கடந்து செல்ல முடியாமல் நிறுத்தும் சூழ் நிலை உருவாகும்.
இப்படியாக நகருக்கும் மினி பஸ்கள் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் இன்று காலை ஒரு மினி பஸ் வேகமாக வந்தபோது, மெயின்ரோட்டில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த இரு சக்கர வாகனங்கள் மீது மோதி நின்றது.
இந்த சம்பவத்தில் அந்த பகுதியில் நின்று கொண்டு இருந்த 2 பேர், பஸ் மொதியதில் காயம் அடைந்தனர்.
இதில் ஒரு சில ஸ்கூட்டர்கள் சேதம் அடைந்தன,.தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த பகுதியில் எப்போதும் சாலையை ஆக்கிரமித்து இருசக்கர வாகனங்ககள் அதிக அளவில் நிறுத்தப்பட்டு இருக்கும் . இதனால் சாலை சுருங்கி ஆக்கிரமிப்பு பெருகி இருப்பதாக கூறப்படுகிறது,