தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் லைட்டர்கள் உற்பத்தி, விற்பனையை முற்றிலும் தடை வேண்டும்; முதல் அமைச்சரிடம் தீப்பெட்டி உரிமையாளர்கள் நேரில் வலியுறுத்தல்
விருதுநகரில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை அகில இந்திய சேம்பர் ஆப் மேட்ச் இண்டஸ்ட்ரீஸ் சார்பில் தீப்பெட்டி உரிமையாளர்கள் நேரில் சந்தித்து பேசினார்கள்/ அப்போது அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் உடன் இருந்தார்.,
இந்த் சந்திப்பின் போது முதல் அமைசரிடம் அளித்த மனுவில் கூறி இருந்ததாவது:-
தமிழ்நாட்டின் தென் மாவட்ட மக்களுக்கு வாழ்வாதாரமாக தீப்பெட்டித் தொழில் உள்ளது. குறிப்பாக இத்தொழிலில் கிராமப்புற பெண்கள் பணியாற்றி வருகிறார்கள்.
கடந்த 8.9.2022 அன்று முதல்வர் அவர்கள் கோவில்பட்டி தீப்பெட்டி தொழிற்சாலையை பார்வையிட வந்த பொழுது பிளாஸ்டிக் சிகரெட் லைட்டரை சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு தடை செய்ய வேண்டும் என தங்களிடம் நாங்கள் கோரிக்கை வைத்தோம்.
கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து சீனாவில் இருந்து பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களை இறக்குமதி . செய்ய தடை செய்ய வேண்டும் என ஒன்றிய அரசுக்கு உடனடியாக பரிந்துரை செய்தீர்கள்
முதல்வர் பரிந்துரையை ஏற்றுக் கொண்ட ஒன்றிய அரசு ரூ.20/-க்கு குறைவான சிகரெட் லைட்டர்களை இறக்குமதி செய்ய தடை விதித்து 29.6.2023-ல் உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் ஒன்றிய அரசு ரூ.20/-க்கு குறைவான பிளாஸ்டிக் லைட்டர்களை இறக்குமதி செய்ய தடை விதித்து இருந்தாலும் நேபாளம் வழியாக சட்டத்திற்கு புறம்பாக முறையற்ற வகையில் நம் நாட்டுக்குள் ஒரு முறை பயன்படுத்தும் பிளாட்டிக் லைட்டர் மற்றும் அதன் உதிரி பாகங்கள் இறக்குமதி ஆவதை தடை செய்ய ஒன்றிய அரசுக்கு மீண்டும் தாங்கள் பரிந்துரை செய்தீர்கள். தங்களது பரிந்துரையை ஏற்று ஒன்றிய அரசு 13.10.2024 அன்று சிகரெட் லைட்டர் உதிரி பாகங்களை இறக்குமதி செய்வதற்கு தடை வித்துள்ளது.
தற்சமயம் இந்தியாவிலிலேயே பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் தயாரிக்கப்பட்டு வெளிச்சந்தையில் குறைவான விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறத.
தற்சமயம் உலகம் முழுவதும் 50,000 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் உபயோகப்படுத்தப்பட்டு வருகிது. இதில் 90 விழுக்காடு பூமிக்கடியில் போகிறது. பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களை நம் நாட்டில் அனுமதித்தால் நூற்றாண்டுகள் பழமையான தீப்பெட்டித் தொழில் அழிவதோடு மேலும் 15000 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் இந்திய மண்ணிற்குள் போய்விடும். இதனால் நம் நாட்டின் சுற்றுச் சூழல் மிகவும் பாதிக்கப்படும்.
எனவே முதல்வர் , நூறாண்டுகள் பழமையான தீப்பெட்டித் தொழிலையும் அதில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குடும்பங்களின் வாழ்வாதாரம் மற்றும் தமிழ்நாட்டின் சுற்றுப்புற சூழ்நிலையை கருதி பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர் உற்பத்தி செய்வதையும், விற்பனை செய்வதையும், பயன்படுத்துவதையும் தமிழ்நாட்டில் முற்றிலும் தடை செய்து தரும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
சுற்றுப்புறச் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அந்தமான் நிக்கோபார் அரசு . 2019ம் ஆண்டு ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களுக்கு தடை விதித்துள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் ஆட்சி காலததில் தீப்பெட்டித் தொழிலை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.
அவரின் வழிவந்த தாங்கள் தீப்பெட்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை காத்திடவும், தமிழ்நாட்டின் பாரம்பரிய தொழிலான தீப்பெட்டி தொழிலை பாதுகாத்திடவும், அந்தமான் நிக்கோபார் அரசு போல சுற்றுச்சூழலை மேம்படுத்திட ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களை உற்பத்தி செய்வதையும், விற்பனை செய்வதையும், பயன்படுத்துவதையும் தமிழ்நாட்டில் முற்றிலும் . தடை செய்திட வேண்டுமாய் பணிவுடன் வேண்டுகிறோம்.
மேற்படி தடையை இந்தியா முழுவதும் கொண்டு வர ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்யும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.