• November 13, 2024

சென்னை ரிப்பன் மாளிகையை பார்வையிட பொதுமக்கள் அனுமதி

 சென்னை ரிப்பன் மாளிகையை பார்வையிட பொதுமக்கள் அனுமதி

சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக பாரம்பரிய கட்டிடமான ரிப்பன் மாளிகை விளங்கி வருகிறது. 1913-ம் ஆண்டு ரிப்பன் மாளிகை திறக்கப்பட்டது. பிரிட்டிஷ் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ரிப்பன் பிரபு நினைவாக இந்த மாளிகைக்கு ரிப்பன் மாளிகை என்று அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த மாளிகை 279 அடி நீளமும், 105 அடி அகலமும், 141 அடி உயரமும் கொண்டது.

சென்னை மாநகராட்சியின் அனைத்து முக்கிய அலுவல் சார்ந்த பணிகளும் இந்த ரிப்பன் மாளிகையில்தான் நடைபெறும் என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான்.

இந்நிலையில், இந்த பழமை வாய்ந்த சென்னை மாநகரின் பாரம்பரிய கட்டடங்களில் ஒன்றான 111 ஆண்டுகள் பழமையான ரிப்பன் மாளிகை மற்றும் வளாகத்தை பார்வையிட ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

அதன்படி, ரிப்பன் மாளிகையை பார்வையிட ஆர்வமுள்ளவர்கள் தனி நபராகவோ அல்லது கவ்லி சுற்றுலா வர விரும்பும் கல்வி நிறுவனங்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் மூலம் commcellgcc@gmail.com என்ற மின்னஞ்சல் அல்லது 94451 90856 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.

சென்னையின் வரலாறறை தெரிந்து கொள்வதற்கும், ரிப்பன் மாளிகையின் கட்டுமானம் மற்றும் மாநகராடசி செயல்படும் விதம் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ளும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *