தூத்துக்குடி மாவட்ட சப் ஜூனியர் பெண்கள் ஆக்கி அணி தேர்வு
தூத்துக்குடி மாவட்ட சப் ஜூனியர் பெண்கள் ஆக்கி அணி தேர்வு கோவில்பட்டி காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது இந்த தேர்வில் மொத்தம் 35 வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
தேர்வு குழு உறுப்பினர்களாக செயல்பட்டு காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பிரகாஷ், சுரேஷ்குமார், ஆகியோர் வீராங்கனைகளை தேர்வு செய்தனர்.
தேர்வு செய்யப்பட்ட வீராங்கனைகளை ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி தலைவர் மோகன்ராஜ் அருமைநாயகம் மற்றும் செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி ஆகியோர் அறிவித்தனர் தேர்வு செய்யப்பட்ட வீராங்கனைகள் விவரம் வருமாறு:-
தூத்துக்குடி தஷ்னவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப்பள்ளி பள்ளியிலிருந்து சந்திரியா ,.பவித்ரா, சரண்யா, எம்.பவித்ரா, கௌரி லட்சுமி, அர்ச்சனா,
கோவில்பட்டி லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் இருந்து மகாலட்சுமி, செல்வராணி, லட்சுமி பிரியா, ஜெய மாரியம்மாள், ஜனரஞ்சனி, அஸ்வதி,
ராஜீவ் காந்தி விளையாட்டுக் கழகத்திலிருந்து அஸ்வர்தா, அம்சக்கனி,
இலக்குமி ஆலை மேல்நிலைப் பள்ளியில் இருந்து அலகு மிருதுளா,
புனித பால்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் இருந்து கிருத்திகா,
கோவில்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து ஐஸ்வர்யா,
இலுப்பை யூரணி ஆக்கி அணியில் இருந்து மதுமிதா, ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
அணி மேலாளராக சமுத்திரக்கனி பயிற்சியாளராக சுரேஷ்குமார் ஆகியோர் செயல்படுகின்றனர் தேர்வு செய்துள்ள வீராங்கனைகள் திருநெல்வேலியில் நடைபெறும் மாநில அளவிலான சப் ஜூனியர் பெண்கள் சாம்பியன்ஷிப்; போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள் அந்தப் போட்டியில் 29 மாவட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளனர்
நாளை 9ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீராங்கனைகளை தமிழக சப் ஜூனியர் பெண்கள் அணிக்காக தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள் போட்டிகள் அனைத்தும் லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடத்தப்படும்