திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா, யாகசாலை பூஜையுடன்  தொடக்கம்

 திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா, யாகசாலை பூஜையுடன்  தொடக்கம்

முருகப் பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இங்கு ஆண்டுதோறும் நடக்கும் விழாக்களில் கந்தசஷ்டித் திருவிழா முக்கியமானது.

அதன்படி, கந்த சஷ்டி திருவிழா முதல் நாள் யாக சாலை பூஜையுடன் இன்று தொடங்கியது. மதியம் 12 மணிக்கு யாக பூஜையில் தீபாராதனை, 12.45 மணிக்கு வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்களுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி சுவாமி ஜெயந்தி நாதர் சண்முக விலாசம் மண்டபம் வந்து அங்கு தீபாராதனை நடைபெபெறுகிறது.

மாலை 3:30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், 4 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனைக்கு பின் சுவாமி ஜெயந்தி நாதர் கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

வரும் 7-ஆம் தேதியன்று சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. 8-ந்தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

ஸ்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள்  இன்று கடலில் புனித நீராடி, மாலை அணிந்து  சஷ்டி விரதத்தை தொடங்கினர். பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. நிழல் பந்தல்கள் அமைக்கபட்டு இருக்கிறது.பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன,

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *