• November 1, 2024

எல்லை போராளிகளின் தியாகத்தை இன்னாளில் நினைவு கூருவோம்: தவெக தலைவர் விஜய்

 எல்லை போராளிகளின் தியாகத்தை இன்னாளில் நினைவு கூருவோம்: தவெக தலைவர் விஜய்

இந்தியா முழுவதும் மொழிவாரியாக மாநிலங்கள் 1956 நவம்பர் 1-ல் பிரிக்கப்பட்டன. அதன் அடிப்படையில் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் பிரிந்து சென்றன.

இந்நிலையில், மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட தினமான இன்று தமிழர் பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க போராட்டம் நடத்திய எல்லை போராளிகளின் தியாகங்களையும் இன்னாளில் நினைவு கூருவோம் என்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

1956-ல் மொழிவாரி மாகாணங்கள் அமைக்கப்பட்டதன் மூலம், நம்முடைய மாநிலம் நிலப்பரப்பு அளவில், தனி மாநிலமாக உருவெடுத்த தினமே நவம்பர்-1.

மதராஸ் மாகாணமாக இருந்த நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட கோரி, தியாகி சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்து உயிரும் துறந்தார். இதை தன் இதயத்தில் தாங்கிய, கனிவின் திருவுருவம் பேரறிஞர் பெருந்தகை அண்ணா, தான் ஆட்சிக்கு வந்ததும் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி, தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர் பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க போராட்டம் நடத்திய எல்லை போராளிகளின் தியாகங்களையும் இன்னாளில் நினைவு கூருவோம். தியாக பெரும் பின்னணியில் தமிழர்களுக்கு என்று ஒரு தனி மாநிலம் பிறந்த இந்த நாளை (நவம்பர் 1) வரலாற்று நினைவுகளுடன் தமிழ்நாடு தினமாக போற்றி மகிழ்வோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *