எங்களுடைய நோக்கம் எல்லாம் தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்து தான்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 எங்களுடைய நோக்கம் எல்லாம் தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்து தான்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை சைதாப்பேட்டை பஜார் சாலையில் உள்ள, சென்னை துவக்க பள்ளி புதிய கட்டுமான பணிகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மா.சுப்பிரமணியன், ‘சென்னை துவக்கப்பள்ளி கட்டிடத்தை புதிதாக கட்டி தர வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில், வார்டு மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.79 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதில் 4 புதிய வகுப்பறைகள், வாகன நிறுத்தும் இடம், கழிவறை, சமையல் அறை ஆகியவை 5400 சதுர அடி பரப்பில் அமைய உள்ளது.திமுக மக்களை ஏமாற்றுவதாக கூறிய விஜய்யின் விமர்சனத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதிலளித்துள்ளார்.

75 ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு திமுக என்னவெல்லாம் செய்தது என்பதை மக்கள் அனைவரும் அறிந்துகொண்டுதான் இருக்கிறார்கள். சைதாப்பேட்டையின் வளர்ச்சிக்கு திமுகவை தவிர வேறு எந்த கட்சியும் ஒரு சிறு துரும்பைக்கூட எடுத்து போடவில்லை. மேலும் எங்களுடைய நோக்கம் எல்லாம் தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்து, மக்களின் அவசிய தேவைகளை நிறைவேற்றுவது குறித்துதான். வேறு எதிலும் கவனம் சிதறாது, சிதையாது’ என தெரிவித்தார்.

சைதாப்பேட்டை தொகுதியில் மக்கள் நலப்பணிகள் மற்றும் மாநிலம் முழுவதும் சிறந்த திட்டங்களை பட்டியலிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளும் திமுகவால் வளர்ச்சி பெற்றிருக்கிறது. என கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *