“மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2026-ல் செயல்பட தொடங்கும்.” : மத்திய மந்திரி அனுப்ரியா படேல்

 “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2026-ல் செயல்பட தொடங்கும்.” : மத்திய மந்திரி அனுப்ரியா படேல்

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய கூட்டணி கட்சியாக அப்னா தளம் விளங்குகிறது. அதன் தலைவரான அனுப்ரியா படேல், 3-வது முறையாக உத்தர பிரதேசத்தின் மிர்ஸாபூர் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வானதுடன் பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் 3-வது முறையாகவும் இடம்பிடித்துள்ளார்.

மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை மற்றும் ரசாயனம், உரத்துறை இணை மந்திரி உள்ள அவர், மதுரை எய்ம்ஸ் செயல்பாடு, நீட் தோ்வு, சாதிய அரசியல் போன்றவை குறித்து டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது: ‘மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிப்பு 2015-ம் ஆண்டில் வெளியானதாகவும், அதன் அடிக்கல் நாட்டுதல் 2019-ம் ஆண்டு நடைபெற்றதாகவும் கூறினார். தற்போதைய நிலவரப்படி, கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 2026 அக்டோபர் மாதத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முழுமையாக செயல்பாட்டிற்கு வரும்.அந்த பணிகள் துரிதப்படுத்தப்படும்.

மேலும், மாநில வாரிய பாடத்திட்டங்களுக்கு உகந்த வகையில் நீட் தேர்வு பாடத்திட்டம் சீரமைக்கப்பட்டுள்ளதாகவும், கிராமப்புற பின்னணியில் உள்ள மாணவர்கள் தேர்ச்சி பெற்றது இதற்கு சான்று. ஒடுக்கப்பட்ட மற்றும் அனைத்து பின்னணியில் உள்ள மாணவர்கள் ஒரே தேர்வை எழுதி ஒரே கலந்தாய்வில் மருத்துவ கல்லூரிகளில் சேர வாய்ப்பு பெறுகிறார்கள். இதனால் உள்ள சில குளறுபடிகள் கண்டறியப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *