”உன் கூடவுமா அரசியல் பண்ணனும்”: இயக்குநர் போஸ் வெங்கட்
விழுப்புரம் விக்கிரவாண்டியில் நேற்று தமிழக வெற்றி கழக மாநாடு பிரம்மாணடமாக நடைப்பெற்றது. லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்த இந்த மாநாட்டில் பேசிய விஜய், ‘பிளவுவாத சக்தியும், ஊழலுமே நம் எதிரிகள், கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளிப்போம்’ மேலும் தமிழகத்தில் திராவிட மாடல் என்று ஏமாற்றி ஒரு குடும்பத்தினர் கொள்ளையடித்து வருவதாக தாக்கி பேசியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இது குறித்து இயக்குனர் மற்றும் நடிகருமான போஸ் வெங்கட் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “யப்பா.. உன் கூடவுமா அரசியல் பண்ணனும்.. பாவம் அரசியல்.. பள்ளிக்கூட ஒப்பிப்பு.. சினிமா நடிப்பு. மற்றும் அதீத ஞாபக சக்தி.. வியப்பு.. எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்.. முடிவு??? பாப்போம்.. ” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவில் அவர் விஜய்யை மறைமுகமாக சாடியுள்ளார். என்பது தெரியவருகிறது.
நடிகரான போஸ் வெங்கட், இயக்குநராக கன்னி மாடம் மற்றும் தற்போது வெளியான சார் திரைப்படங்களை இயக்கி உள்ளார். கடந்த சனிக்கிழமை கங்குவா பட இசைவெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா, அரசியலுக்கு வர வேண்டும் என போஸ் வெங்கட் அழைப்பு விடுத்து பேசியது பேசுபொருளானது. இயக்குநர் போஸ் வெங்கட் திமுகவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது பதிவுக்கு தவெக கட்சியினரும், விஜய் ரசிகர்களும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து பதிலடி கொடுத்து வருகின்றனர்.