• February 7, 2025

பிரதமர் மோடி லாவோஸ் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார்

 பிரதமர் மோடி லாவோஸ் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார்

பிரதமர் மோடி லாவோஸ் நாட்டுக்கு இன்று தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். அவருடைய 2 நாள் சுற்றுப்பயணத்தில், 21-வது ஆசியன்-இந்தியா மற்றும் 19-வது கிழக்காசிய உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.

லாவோசுக்கு புறப்பட்டு செல்வதற்கு முன் அவர் விடுத்துள்ள செய்தியில்,கூறி இருப்பதாவது:-

”இந்த ஆண்டானது, கிழக்காசிய கொள்கையின் ஒரு தசாப்தமாக குறிக்கப்படுகிறது.
ஆசியன் தலைவர்களுடன் இணைந்து, நம்முடைய விரிவான மூலோபாய நட்புறவின் வளர்ச்சியை மறுஆய்வு செய்யும் பணியை மேற்கொள்வேன்.  நம்முடைய ஒத்துழைப்புக்கான வருங்கால வழிகாட்டுதலை வடிவமைக்கும் பணியும் மேற்கொள்ளப்படும்”

, கிழக்காசிய உச்சி மாநாடு ஆனது, இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளம் ஆகிய சவால்களை கலந்து ஆய்வு செய்வதற்கான ஒரு வாய்ப்பை வழங்கும். பகிரப்பட்ட புத்த மதம் மற்றும் ராமாயண பாரம்பரிய வளங்கள் செறிந்த லாவோ நாடு உள்பட இந்த பகுதியில் அமைந்த நாடுகளுடன் நெருங்கிய கலாசார மற்றும் குடிமக்களுடனான உறவுகளை நாம் பகிர்ந்து இருக்கிறோம்.

இந்த பயணத்தில், பல்வேறு நாடுகளின் உலக தலைவர்களுடன் பல்வேறு இருதரப்பு சந்திப்புகளையும் மற்றும் உரையாடல்களையும் மேற்கொள்ள உள்ளேன்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறி உள்ளார்.,

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *