ஹாரி புரூக் அதிவேக முச்சதம்: இங்கிலாந்து அணி 823 ரன்கள் குவிப்பு
![ஹாரி புரூக் அதிவேக முச்சதம்: இங்கிலாந்து அணி 823 ரன்கள் குவிப்பு](https://tn96news.com/wp-content/uploads/2024/10/harry.webp)
இங்கிலாந்து அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 556-ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸை அதிரடியாக விளையாடியது இங்கிலாந்து அணி. இப்போட்டியில் சிறப்பாக ஆடிய ஜோ ரூட் 262 ரன்கள் குவித்து ஆட்டமிழ்ந்தார்.
பின்னர் களமிறங்கி தனது அதிரடியை தொடங்கிய ஹாரி புரூக் முச்சதம் விளாசினார். இதன்மூலம் ஹாரி புரூக் அதிவேகமாக முச்சதமடித்த பட்டியலில் 2-ம் இடம் பிடித்துள்ளார். இந்திய அணியின் அதிரடி நாயகன் சேவாக் 278 பந்துகளில் முச்சமடித்து முதலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில் 310 பந்துகளில் முச்சதம் அடித்துள்ள ஹாரி புரூக் 317 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 823 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. தற்போது பாகிஸ்தான் அணி தனது 2-வது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 41 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)