மாநில துப்பாக்கி சுடும் போட்டி: தென்மண்டல காவல்துறை சாதனை
தமிழ்நாடு காவல்துறையினருக்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் உள்ள கமாண்டோ பயிற்சி பள்ளி மையத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு மண்டலங்களாக காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் தென்மண்டல காவல்துறை சார்பாக தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், இராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 37 காவல்துறையினர் கலந்துகொண்டனர்.
இதில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் முத்து பிஸ்டல் ரக துப்பாக்கி ரக பிரிவிலும், திருநெல்வேலி மாநகரத்தைச் சேர்ந்த தலைமைக் காவல்ர் சுந்தரமூர்த்தி ரைபிள் ரக சுப்பாக்கி பிரிவிலும், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் ராஜகுரு கார்பைன் ரக துப்பாக்கி பிரிவிலும், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் பிரியா ரைபிள் ரக துப்பாக்கி பிரிவிலும் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கம் பெற்றனர்,.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் முத்து பிஸ்டல் ரக பிரிவிலும், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் ராஜகுரு கார்பைன் ரக துப்பாக்கி பிரிவிலும், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் தர்மதுரை ரைபிள் ரக துப்பாக்கி பிரிவிலும், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் மகாராஜா ரைபிள் ரக துப்பாக்கி பிரிவில் வெள்ளி பதக்கம் பெற்றனர்,
தூத்துக்குடி ஆயுதப்படையைச் சேர்ந்த முத்துலட்சுமி பிஸ்டல் மற்றும் ரிவால்வர் ரக துப்பாக்கி பிரிவிலும், காவலர் ரம்யா கார்பைன் ரக துப்பாக்கி பிரிவில் வெண்கல பதக்கமும் வென்றுள்ளனர். மேற்படி தென்மண்டலம் சார்பாக கலந்து கொண்ட காவல்துறையினர் தூத்துக்குடி வல்லநாடு துப்பாக்கி சூடுதளத்தில் பயிற்சி மேற்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.