கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோடு சுரங்க பாலத்தின் இருபுறமும் சர்வீஸ் சாலை அமைப்பதில் காலதாமதத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
![கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோடு சுரங்க பாலத்தின் இருபுறமும் சர்வீஸ் சாலை அமைப்பதில் காலதாமதத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்](https://tn96news.com/wp-content/uploads/2024/10/ddbc9580-d627-47ec-85a6-322fd28cbbf7-850x560.jpeg)
கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாலத்தின் இருபுறமும் சர்வீஸ் சாலை பணிகளை கால தாமதப்படுத்துவதை கண்டித்தும், சர்வீஸ் சாலை பணிகளில் மெத்தனமாக செயல்படும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்தும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், இந்திய தேசிய மாதர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இளைஞர் பெருமன்றம் நகரச் செயலாளர் செந்தில்ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாதர் சம்மேளன நகரச் செயலாளர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் பாபு, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சேதுராமலிங்கம், இளைஞர் பெருமன்ற நகரதலைவர் ரஞ்சணிகண்ணம்மா, மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர துணை செயலாளர் அலாவுதீன், மாவட்டகுழு உறுப்பினர் செல்லையா, முனியம்மாள், விநாயகமணிகண்டன் மற்றும் இளையரசனேந்தல் சாலை பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்துகொண்டு கோரிக்கை வலியுறுத்தி கோஷமிட்டனர்
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)