நவராத்திரி சிறப்புபதிவு- தாம்பூலப்பை

 நவராத்திரி சிறப்புபதிவு- தாம்பூலப்பை

வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், சீப்பு ,முகம் பார்க்கும் கண்ணாடி ,வளையல் ,மஞ்சள் கயிறு ,தேங்காய், பழம் , பூ , மருதாணி 12.கண்மை,  தட்சணை,  ஜாக்கெட் துணி அல்லது புடவை. ஆகிய  பொருட்களை உள்ளடக்கியது தாம்பூலப்பை.

இதில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு அர்த்தம் உண்டு. தாம்பூலம் என்பது வெற்றிலை, பாக்குக்கு வழங்கப்படும் பொதுப் பெயர்.  வெற்றிலையில் முப்பெருந்தேவியரும் வாசம் செய்கின்றனர்.

மஞ்சள்,குங்குமம்,மஞ்சள் கயிறு சுமங்கலித் தன்மையை வழங்குகிறது. சீப்பு, கணவனின் ஆயுளை விருத்தி செய்வதற்காக,  கண்ணாடி, கணவனின் ஆரோக்கியம் காக்க,  வளையல், மன அமைதி பெற‌ தேங்காய், பாவம் நீங்க, ( மட்டைத் தேங்காய் அளிப்பதே சிறந்தது ஆனால் அதை உரிக்கும் எந்திரம் பல வீடுகளில் இல்லாத நிலையில், உரித்ததேங்காய் கொடுப்பதே_நல்லது.

பழம்,அன்னதானப் பலன் கிடைக்க, பூ, மகிழ்ச்சி பெருக, மருதாணி, நோய் வராதிருக்க, கண்மை ,திருஷ்டி தோஷங்கள் அண்டாதிருக்க,  தட்சணை_லட்சுமி கடாட்சம் பெருக,

ரவிக்கைத்துணி அல்லது புடவை வஸ்திர தானப் பலன் அடைய‌ வழங்குகிறோம்.மனிதர்களிடையே பிறர்க்குக்_கொடுத்து மகிழும்_வழக்கம். வரவே இம்மாதிரி சம்பிரதாயங்கள் ஏற்பட்டன.காலப் போக்கில்,ஆடம்பரத்திற்காகவும், தங்கள் வசதியைப் பிறருக்குக்காட்டவும் கொடுப்பதாக மாறி விட்டது. சோகமே. தாம்பூலம்_வழங்குவதன் நோக்கம் அம்பிகையைத்_திருப்தி செய்வதே. அனைவருக்கும் தாம்பூலம் வழங்கும் போது அம்பிகையும் ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து_தாம்பூலம் பெற்றுக்கொண்டு நம்மை_வாழ்த்துவாள்.  தேவி_எந்த_ரூபத்தில்வேண்டுமானாலும் வரலாம். நமக்குப் பூக்கள் தரும் பூக்காரி, நம் வீட்டுப் பணிப்பெண், ஏன், தெருவில் குப்பைகள் சுத்தம் செய்பவர் இப்படி_யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.

அப்படி இருக்க, தாம்பூலம்_தருவதில் பேதம்_பார்ப்பது,தேவியை_அவமதிப்பது போலாகும்.  வயதான சுமங்கலிகள், பெண்கள், குழந்தைகள் என்பது ஒப்புக்கொள்ளக்கூடிய பிரிவினை. இது தவிர்த்து,அந்தஸ்துவேறுபாடு,பழையகோபதாபங்கள் இவற்றை மனதில் வைத்துத் தரும் தாம்பூலங்களுக்கு எந்தப்_பலனும் இல்லை.*

மேற்குறிப்பிட்ட எல்லாப் பொருட்களையும் வசதியுள்ளவர் தரலாம். இல்லாதோர் வருந்த_வேண்டியதில்லை. தாம்பூலம் கொடுக்கிற சுமங்கலியும் வாங்கும் சுமங்கலியும் இந்த முறைகளை கடைபிடிக்கும் போது மூன்று தேவியரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *