தேமுதிக 20 ம் ஆண்டு கொண்டாட்டம்
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 20 ஆம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள கேப்டன் ஆலயத்தில் (தலைமை கழகம்) நேற்று காலை 11 மணியளவில் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜய்காந்த் கழக கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார்.
\பின்னர் கேப்டன் ஆலயம் பெயர் பலகை திறப்பு விழா, பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாம், கட்சியில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சிகளை துவக்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கழக துணைச் செயலாளர் ப. பார்த்தசாரதி, உயர்மட்ட குழு உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், பகுதி நிர்வாகிகள், வட்ட நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது,







