தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் காரில் குண்டு வெடிக்கும் என மிரட்டிய நபருக்கு வலைவீச்சு
தூத்துக்குடி மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இன்று பிற்பகல் தொடர்பு கொண்ட மர்ம நபர், “தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தியுள்ள வாகனத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
இந்த அறிவிப்பை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீஸ்காரர்,உடனடியாக உயர் அதிகாரிக்கு தகவல் கொடுத்தார். அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தொடர்புகொண்டு தகவல் சொன்னார். இதை தொடர்ந்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்,
நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்தனர், துப்பறியும் மோப்ப நாய்கள் .கொண்டு செல்லப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள், மெட்டல் டிடெக்டர் மூலம் துருவி துருவி சோதனை நடத்தினார்கள்.
இதையடுத்து, நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
வெகுநேரம் நடந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது வெறும் வதந்தி என்று தெரியவந்தது. வெடிகுண்டு புரளியில் ஈடுபட்ட மர்ம நபர் யார் என்பதை அறிய போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர். அவரை தேடி கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது