108 முறை மந்திரம் படிப்பது ஏன்? 

 108 முறை மந்திரம் படிப்பது ஏன்? 

சிலருக்கு இந்த மந்திரங்களை எத்தனை முறை உச்சரிக்க வேண்டும் என்கிற சந்தேகம் வந்து விடுகின்றது. 27 நட்சத்திரங்களுக்கும் தலா 4 பாதங்கள் வீதம் 108 பாதங்களில்  இருந்து வரும் சக்திகளை கிரகித்து உடலில் உள்ள ஆறு ஆதாரங்களை நன்றாக இயங்கும் வகையில் தூண்டச் செய்ய 108 முறை உச்சரிக்க வேண்டும்.

சகஸ்ராரத்தில் உள்ள 1008 இதழ்களில் உள்ள அக்ஷரங்களை தூண்டிவிட்டு எல்லா நாடி, நரம்புகளுக்கும் சக்தி கிடைத்திட 1008 முறை உச்சரிக்க வேண்டும்.

வாயினால் சொல்வதைவிட மனதுக்குள் பலமாக உச்சரிப்பதே அதிக பலன் தரும். அதுவும் மூச்சை கும்பகம் செய்து சொன்னால் முழு பலனும் கிடைக்கும்.

ஒரு மந்திரத்தை 5,00,000 முறை உச்சரிக்க வேண்டும் என்றால் என்ன செய்வது. அதற்கும் சித்தர்கள் ஒரு உபாயத்தை கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறார்கள். அதாவது அமாவாசை அன்று ஒரு மந்திரத்தை 1008 முறை உச்சரித்தால் 50,000 முறை உச்சரிப்பதற்குச் சமம்.

அதுவும் அன்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்தால் 60,000 முறை உச்சரிப்பதற்குச் சமம்,

சூரிய கிரகணத்தன்று ஒரு மந்திரத்தை 1008 முறை உச்சரித்தால் 2,00,000 முறை உச்சரித்ததற்குச் சமம். அதுவே அன்று ஞாயிற்றுக் கிழமையும், பூச நட்சத்திரமும் கூடி இருந்தால் 2,50,000 முறை உச்சரிப்பதற்குச் சமம்.

அன்று ஜெபிப்பவர் ஜென்ம நட்சத்திரமாக இருந்தால் 2,60,000 முறை உச்சரிப்பதற்குச் சமம். அதுவே சூரிய கிரகணம் நடை பெறும் போது உத்ராயணமாக இருந்து, ஞாயிற்றுக் கிழமையாகவும் இருந்து, ஜெபிப்பவரின் ஜன்ம நட்சத்திரமாகவும் இருந்தால் 108 முறை உச்சரித்தாலே 5,00,000 முறை உச்சரித்தற்குச் சமம்.

எவ்வளவு சூட்சுமம் பாருங்கள். இதையெல்லாம் ஞானத்தால் கண்டு பிறர்க்குப் பயன்படும் விதமாக தந்தருளியவர்கள் சித்தர்கள்.  குருவே சரணம் குருவே சரணம்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *