மேட்டுப்பாளையம் – தூத்துக்குடி ரெயில் சேவை 19ம் தேதி தொடக்கம்
மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் – தூத்துக்குடி இடையே வாரம் 2 முறை (எண்-16765 / 16766) ரெயில் இயக்கப்படுகிறது. மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து 19-ந்தேதி மத்திய இணை மந்திரி முருகன் தொடங்கி வைக்கிறார்.
இந்த ரெயில் கோவை, பொள்ளாச்சி, பழனி, மதுரை வழியாக இயக்கப்படும். மேலும், கோவை – மேட்டுப்பாளையம் மெமு ரெயில், இனி நாள்தோறும் 3 முறை போத்தனூர் வரை நீட்டிப்பு சேவையை அவர் தொடங்கி வைக்கிறார்.
தாம்பரம் ரெயில் நிலையத்தில் நடைபெறும் பொறியியல் பணி காரணமாக பல்வேறு ஊர்களில் இருந்து சென்னை செல்லும் பல்வேறு ரெயில்கள் சேவைகள் மாற்றி அமைக்கப்படுகிறது
20692, ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 14 வரை தாம்பரம் நாகர்கோயில் அந்தோதியா ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது 23 நாட்களுக்கு ரெயில் சேவை கிடையாது
22675,22676, ஆகஸ்ட் 15, 16 ,17 ஆகிய தேதிகளில் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் செங்கல்பட்டு வரை மட்டுமே இயங்கும்
20606 ஆகஸ்ட் 14, 15, 16 ஆகிய தேதிகளில் திருச்செந்தூர் சென்னை ரெயில் விழுப்புரம் வரை மட்டுமே செல்லும்
20606 ஆகஸ்ட் 17 அன்று செங்கல்பட்டு காஞ்சிபுரம் அரக்கோணம் வழியாக எழும்பூர் செல்லும்
திருச்சியில் இருத்து அகமதாபாத் வரை செல்லும் வாராந்திர விரைவு ரெயில் (09419,09420 ) 28/07/2024, 04/08/2024, 11/08/2024, 18/08/2024 இந்த நான்கு ஞாயிற்றுகிழமைகளிலும் இந்த ரெயில் சென்னை வழியாக செல்லாமல், விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை, வேலூர், காட்பாடி, ரேணிகுண்டா வழியாக அகமதாபாத் செல்லும் என்று அறிவிக்கபப்ட்டுள்ளது.
.
தூத்துக்குடி தெர்மல் நகர் கேம்ப் 2 பகுதியைச் சேர்ந்தவர் ஆவுடையப்பன் மகன் முருகன் (47), இவர் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை தூத்துக்குடி புதிய துறைமுகம் ஊரணி ஒத்தவீடு ரோட்டில் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் பலத்த காயமடைந்த முருகன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தெர்மல்நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஷோபனா ஜென்சி வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகிறார். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் மோதி விட்டு சென்ற வாகனத்தை போலீசார் தேடி வருகின்றனர்.