நாடாளுமன்ற தேர்தல்: திமுக கூட்டணியின் வரலாற்று சாதனை
![நாடாளுமன்ற தேர்தல்: திமுக கூட்டணியின் வரலாற்று சாதனை](https://tn96news.com/wp-content/uploads/2024/06/th.jpeg)
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில்நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் 39 புதுச்சேரியில் 1 என 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றி இருக்கிறது.
எதிரணியில் இருந்த கட்சிகள் எதுவும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறமுடியவில்லை. அந்த அளவுக்கு திமுக அமோக வெற்றி பெற்று வரலாற்று சாதனை பெற்று இருக்கிறது.
திமுக 21, காங்கிரஸ் 9+1=10, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிய கம்யூனிஸ்டு, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொ.ம.தே.க. ஆகிய கட்சிகள் 8 தொகுதிகளை கைப்பற்றி ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி சாதனை படைத்து இருக்கிறது.
கடைசியாக 2004 ம் ஆண்டில் கருணாநிதி தலைமையிலான திமுக கூட்டணி படைத்த சாதனையை 20 ஆண்டுகளுக்கு பிறகு மறுபடியும் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)