தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி 5,40,879 வாக்குகள் பெற்று அபார வெற்றி; எதிர்த்து போட்டியிட்ட 27 பேரும் டெபாசிட் இழந்தனர்
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி, அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி, பாஜக கூட்டணியில் இடம்பெற்ற தமாகா சார்பில் விஜ்யசீலன், நாம் தமிழர் கட்சி சார்பில் ரோவினா ரூத் ஜேன் உள்பட 28 வேட்பாளர்கள் களம் கண்டனர்.
இன்று காலை தூத்துக்குடி வஉசி அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ,முதலில் தபால்வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் திமுக வேட்பாளர் கனிமொழி அதிக வாக்குகள் பெற்றார்.
தொடர்ந்து மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலை வகித்தார். இறுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி 5,40,879 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார்.
டெபாசிட் வாங்க 179293 ஓட்டு பெற வேண்டும். இதனால் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட 27 பேரும் டெபாசிட் இழந்தனர்.
தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் முக்கிய கட்சி வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விவரம் வருமாறு:-
கனிமொழி( திமுக) – 5,40,879
சிவசாமி வேலுமணி (அதிமுக )- 1,47,407
ரொவீனா ரூத் ஜோன்-
(நாம் தமிழர்) – 1,20,030
விஜயசீலன் (தமாகா) – 1,16,470
தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள கனிமொழிக்கு அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன்,ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா ,விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இந்தியா கூட்டணி மற்றும் திமுக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.