ஒரே நேர் கோட்டில் அணிவகுத்த கோள்கள்: தூத்துக்குடியில் இருந்து டெலஸ்கோப் மூலம் பொதுமக்கள் பார்த்தனர்
![ஒரே நேர் கோட்டில் அணிவகுத்த கோள்கள்: தூத்துக்குடியில் இருந்து டெலஸ்கோப் மூலம் பொதுமக்கள் பார்த்தனர்](https://tn96news.com/wp-content/uploads/2024/06/64e0058a-546c-442c-9c26-3cf9eb789025-scaled.jpg)
ஜூன் 3 மற்றும் 4 ம் தேதிகளில் அதிகாலை முதல் கீழ் திசை வானில் ஒரே நேர் கோட்டில் வியாழன் ,புதன், பூரேனேஸ், சனி,செவ்வாய்,நெப்டியூன்,ஆகிய 6 கோள்கள் அணிவகுத்து நின்றன.
அணிவகுத்து என்ற கோள்களை பொதுமக்கள் டெலஸ்கோப்மூலம் பார்வையிட மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சஏற்பாடுகள் செய்திருந்தது.
.தூத்துக்குடி கடற்கரையில் நடந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் அணிவகுத்து நின்ற கோள்களை பார்வையிட்டனர்.
தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி, தூத்துக்குடி அஸ்ட்ரோ கிளப் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சம்பத் சாமுவேல் ஆகியோர் அணிவகுத்து நின்ற 6 கோள்களை பார்வையிட பயிற்சி அளித்தனர்.அனைவருக்கும் கோள்கள் திருவிழா விழிப்புணர்வு அட்டைகள் வழங்கப்பட்டது.
மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ரங்கநாதன்,கோபிநாத்,தூத்துக்குடி அஸ்ட்ரோ கிளப் நிர்வாகிகள் ஜெயபால், கல்யாணசுந்தரம், ராஜ்குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)