• May 18, 2024

திமுக ஆட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; டி. ஜெயக்குமார் குற்றச்சாட்டு

 திமுக ஆட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; டி. ஜெயக்குமார் குற்றச்சாட்டு

கோடை வெயிலால் பாதிக்கப்படும் மக்களை காக்கும் வகையில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 அந்த வகையில் அதிமுக மாணவரணி செயலாளர் எஸ் ஆர் விஜயகுமார் ஏற்பாட்டில் சென்னை அண்ணாநகர் திரு வி. க. பார்க் அருகே கோடை வெயிலினால் பாதிக்கப்படும் மக்களுக்கு தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெயிலால் பாதிக்கப்படும் மக்களுக்கு தர்பூசணி,இளநீர்,வெள்ளரிக்காய்,மோர், அண்ணாசி , சாத்துக்குடி உள்ளிட்ட பழ வகைகளை வழங்கினார் இந்நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர் இதை செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது :-

தமிழகத்தில் பரிசல் சென்ற ஆற்றில் இன்று பேருந்து செல்லும் அளவிற்கு நீர் நிலைகள் மாறியுள்ளன.

நாட்டில் எவ்வளவு பிரச்சினை உள்ளது கோட்டையில் இருந்து முதல் அமைச்சர் ஆய்வு செய்யாமல் கொடைக்கானல் சென்று ஓய்வு எடுக்கிறார்.

மழை காலத்தில் தண்ணீரை செமிக்காத காரணத்தால் இன்று தண்ணிர் பிரச்சினை தலை விரித்து ஆடும் சூழல் உள்ளது.

விமர்சனங்களை தாங்கும் அளவிற்கு அதிமுகவுக்கு பக்குவம் இருந்தது ஆனால் இன்று அரசு விதிகளை பின்பற்றாமல் சவுக்கு சங்கரை கைது செய்துள்ளனர்.

இன்னும் 2 ஆண்டுகள் மட்டுமே இந்த ஆட்சி இருக்கும்..அப்போது இதற்கு பதில் சொல்ல வேண்டிய சூழல் வரும் . 

அதிமுக ஆட்சியில் பொய் வழக்கு போடாமல் உண்மை வழக்கை வைத்தே நடவடிக்கை எடுப்போம். 

பிரதமர் என்பவர் பொதுவான நபர், எல்லோருக்கும் அவர் பிரதமர் ஆனால் பொதுவான பிரதமர் மதத்தால் பிளவு படுத்தி இந்துக்கள் வாக்குகளை பெற நினைப்பது கண்டிக்கத்தக்கது.

ஆங்கிலேயர் எப்படி மக்களை பிரித்து ஆட்சி செய்தனரோ அதே போல ஒரு கோட்பாட்டை இன்று பிரதமர் எடுத்துள்ளார்.

இஸ்லாமியர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் அவர்களை பிளவுபடுத்தி வாக்குகளை சேகரிக்க நினைப்பதை ஏற்றுகொள்ள முடியாது 

நீங்கள் ஆட்சிக்கு வர போவது இல்லை என ஏதேனும் கருத்து அவர்களுக்கு கிடைத்து இருக்கலாம். அதற்காக மதத்தை வைத்து அரசியல் செய்ய கூடாது.

மோடி ,காங்கிரஸ் என எந்த கொம்பன் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் தமிழக இட ஒதுக்கீட்டில் ஒரு ஆணியும் புடுங்கமுடியாது.

ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்றாலும் மக்களுக்கு உதவும் இயக்கம் அதிமுக. ஆளும் கட்சி எதிர்கட்சி என்று பாராமல் மக்கள் பிரச்சனையை தீர்க்க தண்ணிர் பந்தலை திறந்து வந்தோம் ஆனால் இந்த அரசு திறக்க விடாமல் தடுக்க நினைக்கின்றனர். இது ஒரு மோசமான சூழல் ஆனால் தேர்தல் ஆணையம் மூலம் அனுமதி பெற்று திறந்து வைத்துள்ளோம்.

ஒரு பக்கம் சட்டம் ஒழுங்கு பிரச்சினை மற்றொருபுறம் போதை பொருளால் இளைஞர்கள் பெரிய அளவில் அடிமையாகி உள்ளனர். தற்போது குடிநீர் பிரச்சினை அதிகரித்துள்ளது.

23% தண்ணீர் மட்டுமே தற்போது நீர் நிலைகளில் உள்ளது,விவசாயம் பாதிக்கபட்டு உள்ளது குடிநீர் பிரச்சினையை தீர்க்க அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

205 டி.எம்.சி தண்ணீர் காவேரியில் பெற்று இருக்க வேண்டும் அதில் 50% மட்டுமே பெற்றோம். அதற்கு காரணம் இந்த விடியா அரசே காரணம்

இவ்வாறு டி. ஜெயக்குமார் கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *