கோவில்பட்டி தெப்ப திருவிழா அவசர ஏற்பாட்டில் நடந்தது
![கோவில்பட்டி தெப்ப திருவிழா அவசர ஏற்பாட்டில் நடந்தது](https://tn96news.com/wp-content/uploads/2024/04/IMG-20240415-WA0709-850x560.jpg)
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் – பூவனநாத சுவாமி திருக்கோவில் பங்குனி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத் திருவிழா கோவில்பட்டி நாடார் உறவின் முறை சங்கம் சார்பில் நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு உறவின் முறை சங்கத்தில் ஒரு பிரிவினர் பிரச்சினை ஏற்படுத்துவதாக கூறி இந்த ஆண்டு தெப்ப திருவிழா ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவும், மண்டகபபடிதாரர் நிகழ்ச்சி வழக்கம் போல் நடைபெறும் என்று கோவில் செயல் அலுவலருக்கு
நாடார் உறவின் முறை சங்க தலைவர் செயலாளர் எஸ்.ஆர்.ஜெயபாலன் நேற்றுமதியம் கடிதம் அனுப்பினார்.
இதை தொடர்ந்து செண்பகவல்லி அம்மன் கோவில் நிர்வாகம், போலீஸ் துணை சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவித்து போலீஸ் பாதுகாப்புடன் தெப்பதிருவிழாவை நடத்த முடிவு செய்தது.
இதைதொடர்ந்து அவசர ஏற்பாட்டில் மின்னல் வேகத்தில் பணிகள் நடத்தன. மிதவை தேர் செய்யப்பட்டு, மின் அலங்காரம், மலர் அலங்காரம் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கபட்டது.
மாலை 5 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமியும், அம்பாளும் கோவிலில் இருந்து புறப்பட்டு மெயின் ரோட்டில் உள்ள அடைக்கலம் காத்தான் மண்டபம் வந்தடைந்தனர். அங்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.பின்னர் சுவாமி, அம்பாள் திருவீதியுலா நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து தெப்பக் குளம் வந்தடைந்தது.
தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமியும், அம்பாளும் தெப்பத்தில் எழுந்தருளி 3 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
![](https://tn96news.com/wp-content/uploads/2024/04/IMG-20240415-WA0717-1024x887.jpg)
![](https://tn96news.com/wp-content/uploads/2024/04/IMG-20240415-WA0700-1024x512.jpg)
வழக்கமாக தெப்பத்தில் மிதவை தேரில் மண்டகபடிதாரர்கள் இருப்பார்கள். இந்த முறை யாரும் இல்லை. தெப்பக்குளம் வெளியே இருந்து பார்வையிட்டனர். சங்கத்தின் இரு பிரிவை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.
நகர்மன்ற தலைவர் கருணாநிதி,அறங்காவலர் குழு தலைவர் ராஜகுரு, உறுப்பினர்கள், கோவில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி, ஆய்வாளர் சிவகலைப்பிரியாஉள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இரவு 7 மணிக்கு அடைக்கலம் காத்தான் மண்டபம் அருகே மண்டகப்படிதாரர் சார்பில் நெல்லை எஸ்.ஆர்.சந்திரன் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.
தெப்பத்தேர் திருவிழாவை முன்னிட்டு கோவில்பட்டி காமராஜ் மெட்ரிக் பள்ளியில் வைத்து மெகா விருந்து பரிமாறப்பட்டது. சுமார் 7500 பக்தர்கள் விருந்தில் கலந்து கொண்டனர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)