செண்பகவல்லி அம்மன் கோவில் சார்பில் தெப்பதிருவிழா நடத்த அவசர ஏற்பாடு
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் – பூவனநாத சுவாமி திருக்கோவில் பங்குனி பெருந்திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் ஒன்றான தெப்பத் திருவிழா இன்று மாலை கோவில்பட்டி நாடார் உறவுமுறை சங்கம் சார்பில் நடைபெறுவதாக இருந்தது,.
இந்த நிலையில் சிலரின் இடையூறு காரணமாக தெப்ப திருவிழா ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவும், மற்றபடி மண்டகபபடிதாரர் நிகழ்ச்சி வழக்கம் போல் நடைபெறும் என்றும் அறிவிக்கபட்டு உள்ளது.
இது தொடர்பாக கோவில்பட்டி நாடார் உறவின் முறை சங்க தலைவர் ஏ.பி.கே. பழனிசெல்வம், உப தலைவர் எம்.செல்வராஜ், செயலாளர் எஸ்.ஆர்.ஜெயபாலன் பொருளாளர் டி.ஆர்.சுரேஷ் ஆகியோர் செண்பகவல்லி அம்மன் கோவில் செயல் அலுவலருக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.
இதை தொடர்ந்து செண்பகவல்லி அம்மன் கோவில் நிர்வாகம் சார்பில் தெப்பதிருவிழாவை மட்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் அவசர அவசரமாக நடைபெற்று வருகின்றன,
.சென்பகவல்லி அம்மன் கோவிலில் இருந்து இன்று மாலை 5 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்மன் வீதி உலா நடக்கிறது. மண்டகபடிதாரர்: கோவில்பட்டி நாடார் உறவின் முறை சங்கம். இரவு 7 மணிக்கு அடைக்கலம் காத்தான் மண்டபத்தில் சுவாமி-அம்மன் பூஜை மண்டகபடிதாரர் சார்பில் நடத்தப்பட்டு தெப்பக்குளம் வரை கொண்டு வரப்படும்.
அதன்பிறகு தெப்ப உற்சவம் மட்டும் கோவில் சார்பில் நடக்கும். வழக்கமாக தெப்பத்தில் சுவாமி-அம்மன் 9 முறை சுற்றி வருவார்கள்.இந்த முறை எத்தனை முறை என்று தெரியவில்லை.
மேலும் மண்டகப்படிதாரர் சார்பில் நெல்லை எஸ்.ஆர்.சந்திரன் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.