நாகம்பட்டி கல்லூரியில் மனோன்மணியம் சுந்தரனார் பிறந்த நாள் கருத்தரங்கம்
தூத்துக்குடி மாவட்டம் நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் மனோன்மணியம் சுந்தரனாரின் 169 வது பிறந்த நாள் விழா நடைபெற்றது.
பிறந்த நாள் மலர் மற்றும் இ புத்தகம் வெளியிடப்பட்டது. பேராசிரியர் மு. பவானி வரவேற்று பேசினார். தமிழ்த்துறை தலைவர் இரா. சேதுராமன் தலைமை தாங்கினார்.. பாலபுரஸ்கார் விருது பெற்ற சிறார் இலக்கிய எழுத்தாளர் கா. உதயசங்கர் சிறப்புரை ஆற்றினார்.
.அவர் பேசுகையில், அரசு மற்றும் கல்வி நிறுவனங்கள் ஏதேனும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய சுந்தரனார்க்கு விழா கொண்டாடியதாக நான் அறியவில்லை. கோவில்பட்டியில் இதுவரை 8 எழுத்தாளர்கள் சாகித்திய அகாடமி விருது பெற்றுள்ளார்கள் பாடப்புத்தகங்களை மட்டும் படிக்காமல் துறை சார்ந்த பல்வேறு நூல்களையும் வாசிக்க வேண்டும்” என்றார்.
திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் செல்லப்பா இந்துக் கல்லூரியில் சுந்தரனாரின் பணி அனுபவங்களைப் பற்றி பேசினார். பேராசிரியர் இலக்குவன் உலகில் உள்ள எந்தவொரு செவ்வியல் மொழி அழிந்தாலும் தமிழ் மொழி அழியாது என்று சுந்தரனார் கூறி உள்ளார் என்றார்.
தெற்கு இலந்தகுளம் ஊராட்சி தலைவர் மற்றும் சமூக ஆய்வாளர் செல்வி மனோன்மணியம் நாடகத்தை மாணவர்களுக்கு கதையாக கூறினார். கீழமுடிமன் புனித வளன் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அன்பு நாதன், கயத்தாறு பாபா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயக்குநர் வீரபாண்டி, நாகம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் மாரியப்பன், பசுவந்தனை ஊராட்சி மன்றத் தலைவர் லட்சுமி சிதம்பரம், நாகம்பட்டி சேதுபதி, பசுவந்தனை அஷ்வந்த், வணிக நிர்வாகவியல் துறைத்தலைவர் வேல்ராஜ், உடற்கல்வி இயக்குநர் கணேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பேராசிரியர் டால்பின் ராஜா நன்றி கூறினார். . பிறந்த நாள் விழா என்றால் இனிப்பு வழங்குவார்கள். இங்கு 5 வகையான பழங்கள் மற்றும் மோர் வழங்கினார்கள். நிகழ்ச்சியை பேராசிரியர் மு. சித்ரா தேவி தொகுத்து வழங்கினார்.