கோவில்பட்டியில் நாளை பங்குனி திருவிழா தொடக்கம் ; மக்களை மகிழ்விக்க ராட்டினங்கள் தயார்
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவில்.பங்குனி பெருந்திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றம் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.
இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 4:30 மணிக்கு திருவனந்தல் பூஜை நடக்கிறது.காலை 6 மணிக்கு மேல் 6:30 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறும்.மாலை 4 மணிக்கு திருநாவுக்கரசு சுவாமிகள் உழவாரப்பணிவிடை ஸ்ரீ பலிநாதர் அஸ்திரதேவர் திருவீதி உலா நடக்கிறது.மண்டகபடிதாரர் திருக்கோவில்.
இரவு 7மணிக்கு பூங்கோவில் சப்பரத்தில் சுவாமி-அம்மன் வீதி உலா நடக்கிறது. மண்டகபடிதாரர் பிராமனாள் சமூகம்.
மறுநாள் 6-ந்தேதி காலை 8 மணிக்கு சப்பரம்-பல்லக்கில் சுவாமி-அம்மன் திருவீதி உலா , இரவு 7 மணிக்கு பூத வாகனம்-காமதேனு வாகனம் வீதி உலா நடக்கிறது. மண்டப்டிதாரர்- பூலோகபாண்டியதேவர், ரத்தினவேல்சாமி தேவர் இனாம் மணியாச்சி
தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மண்டகபடிதாரர்கள் சார்பில் சுவாமி –அம்மன் அலங்காரம் வீதி உலா நடக்கிறது. பக்தர்கள் மனம் குளிரும் வகையில் சிறப்பு இன்னிசை நிகழ்ச்சிகள் நடக்க இருக்கின்றன. விழாவின் சிகர நிகழ்ச்சியாக ஏப்ரல் 13 அன்று தேர் திருவிழா நடக்கிறது, 14-ந் தேதி தீர்த்தவாரி ,15 –ந் தேதி தெப்பத்திருவிழா, அம்மன் பவனி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர்,உறுப்பினர்கள்,அதிகாரிகள் செய்து வருகின்றனர். கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராம மக்களுக்கு இந்த திருவிழாவில் பங்கேற்று சுவாமி-அம்மன் அருள் பெற்று செல்வார்கள். தினமும் பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும். இதனால் அவர்களை மகிழ்விக்கும் வகையில் கோவில் மைதானத்தில் விதவிதாமான ராட்டினங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. சிறுவர்களை கவரும் வகையில் பொம்மை கடைகள், விளையாட்டு பொருட்கள்விற்பனை கடைகள் உருவாகி உள்ளன. ராட்சத அப்பளம் உள்ளிட்ட தின்பண்ட பொருட்கள் விற்பனையகங்கள் அமைக்கபப்பட்டுள்ளன. கோவில் திருவிழாவில் அசம்பாதவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவோரை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் ஏற்பாட்டில் சாதாரண உடை அணிந்த போலீசார் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.