பள்ளி மாணவர்களுக்கு கராத்தே பட்டய சான்றிதழ்
கோவில்பட்டியில் கராத்தே மாணவர்களுக்கு தகுதி கராத்தே பட்டய சான்றிதழ் வழங்கப்பட்டது..
கஸ்தூரிபா நர்சரி பள்ளி வளாகத்தில் நடந்த விழாவில் கோவில்பட்டியில் உள்ள கராத்தே பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். தேர்வுகளை கராத்தே மாஸ்டர் விஜயராஜன் நடத்தினார்.
தொடர்ந்து நடந்த சான்றிதழ் வழங்கும் விழாவுக்கு கஸ்தூரிபா நர்சரி பள்ளி தலைமை ஆசிரியர் சரஸ்வதி சுபா தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் கே.சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கராத்தே மாணவர்களுக்கு பட்டய சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
மாணவர் முகிலன் பச்சை பெல்ட், கவின்ராஜ், சிவவாசன், வானதிபாலன் நிஷாம்பிகா, ரிஷிவேந்தன் ஆகியோர் ஊதா நிற பெல்ட், டேவிஸ், சுதிஸ்குமார், ஆதித், ஜனனாஸ்ரீ, ரேகித், அம்பரிஸ் ஆகியோர் ஆரஞ்ச் பெல்ட், பிரதிக்ஷா, அபிலேகாஸ்ரீ, தனிஸா, அனிஸ் ஆகியோர் மஞ்சள் நிற பெல்ட் பெற்றனர். விழா ஏற்பாடுகளை ஏ.கே. ஆல் ஸ்போர்ட்ஸ் டெவலப்மென்ட் அசோசியேஷன் நிறுவனர் காசி மாரியப்பன் செய்திருந்தார்.