கோவில்பட்டியில் பாஜகவினர் சைக்கிளில் சென்று வாக்கு சேகரிப்பு
தூத்துக்குடி நாடாளுமன்ற மக்களவை தொகுதி பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர் விஜய்சீலனை ஆதரித்து சைக்கிள் சின்னத்தில் மாநில மகளிர் பொதுச்செயலாளர் நெல்லையம்மாள் தலைமையில் கோவில்பட்டியில் வாக்கு சேகரிக்கப்பட்டது.
நகரத் தலைவர் போலீஸ் சீனிவாசன், நகர பொதுச்செயலாளர் விஜயகுமார் மற்றும் கிழக்கு ஒன்றிய தலைவர் மாடசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு வீதி வீதியாக சைக்கிளில் சென்று வாக்கு சேகரித்தனர். மேலும் வீடு வீடாகவும் சென்று வாக்கு சேகரிக்கப்பட்டது. இந்த தகவலை ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் அம்மன் மாரிமுத்து தெரிவித்து உள்ளார்.