கோவில்பட்டியில் சுட்டெரிக்கும் வெயில்; இளநீர் விலை உயர்ந்தது
![கோவில்பட்டியில் சுட்டெரிக்கும் வெயில்; இளநீர் விலை உயர்ந்தது](https://tn96news.com/wp-content/uploads/2024/04/5da5ba74-2878-4ea0-9e84-69c92eb45d4f-850x560.jpeg)
தமிழ்நாடு முழுவதும் வெயில் கொளுத்தி வருகிறது. கோடை வெயிலில் தாக்கம் அதிகம் உள்ளது. பல்வேறு மாவட்டங்களில் வெயில் அளவு 100 டிகிரி பாரன்ஹீட் தாண்டி வெயில் அடிக்கிறது.
கோவில்பட்டியை எடுத்துக்கொண்டால் கோடை காலம் தொடங்கியதில் இருந்து வெயில் அளவு அதிகமாகவே உள்ளது, இன்று வெயில் அளவு 100.4 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவாகி இருந்தது.
அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள் அனலில் சிக்கி தவித்தனர். வெளியில் அலைந்து வேலைபார்ப்பவர்கள் பெரிதும் சிரமப்பட்டனர். கூலி வேலை செய்வோர் வெயிலில் மிகவும் கஷ்டப்பட்டனர்,
வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்க ஜில் என்று குளிர்பானம், இளநீர், பழரசம் குடித்து சிறிது ஆசுவாசப்படுத்தி கொண்டனர், சாலையோர கடைகளில் வழக்கமாக 50 ரூபாய்க்கு விற்ற இளநீர் ரூ.60க்கு விற்றது, நுங்கு விற்பனையும் அதிகரித்தது.
வீடுகளில் பெண்கள் சமையல் அறையில் தவியாய் தவித்தனர். அறை முழுவதும் சூடாக இருந்தது.மின் விசிறி இயக்கினால் சூடான காற்றுதான் வருகிறது. கோடை காலம் எப்போது முடியும் என்ற எண்ணத்தில் ஒவ்வொரு நாட்களையும் மக்கள் கடந்து வருகிறார்கள்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)